தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


அதிக பணி நிமித்தமாக நீண்ட காலம் பதிவெழுத முடியவில்லை என்றாலும் திரட்டிகளின் ஊடக பதிவர்களின் பதிவுகளை தினமும் படித்து வருகிறேன் சகோதரி ஆமினா அவர்களின் குட்டி சுவர்க்கம் தளத்தில் வெளியான பதிவில் தமிழ் மணம் எனும் நாகரீக மற்ற திரட்டியின் உண்மை முகம் பற்றி அறிய கிடைத்தது ,

இஸ்லாமியர்களின் முகமனை கொச்சை படுத்தியதற்கும் 

பொதுவில் நாகரீக மற்ற முறையில் நடந்து கொண்டமையிற்கும் 

தமிழ் மணத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்வதோடு எனது தளத்தில் உள்ள தமிழ் மண ஓட்டளிப்பு பட்டையும் நீக்கிகொள்கின்றேன்  .

இந்த விடயம் மக்களிடயே சென்றடைவதற்காக சகோதரி ஆமினாவின் பதிவினை இங்கே மீள் பதிவிடுகின்றேன் .


தமிழ் மணம் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை இது தொடரும்...





இப்போது பதிவுலகில் நடக்கும் பிரச்சனைக்கான தமிழ்மணம் நிர்வாகி மற்றும் டெரர் கும்மி பதிவர்களின் விவாதங்களை ஆரம்பத்திலிருந்து முந்தைய வினாடி வரை பார்த்த ஒரே காரணத்தால் சில விஷயங்களை சொல்ல விரும்பிகிறேன்.
சகோ பெயரிலி.
தமிழ்மணத்த பத்தி பதிவு வந்தா இவர் பிரசண்ட் சார் சொல்லுவார்ன்னு மட்டும் தெரியும். அத வச்சு தான் இவரும் தமிழ்மண நிர்வாகி(களில் ஒருவர்??????) என புரிந்துக்கொண்டேன். இன்னும் யாராச்சுக்கும் தெரியலைன்னா தெரிஞ்சு வச்சுக்கோங்கப்பா,.......... இவுகதேன் தமிழ்மண நிர்வாகி. சேர்த்தல்,விலக்குதல், எதிர் பதிவுகளுக்கு பதில் பின்னூட்டம் போடுதல் என தமிழ்மணத்தின் அதிமுக்கிய பெரும் பொறுப்புகளில் உள்ள பெரு மதிப்புமிக்க, மிக்க மரியாதைக்குரிய நிர்வாகி. (ஏன் சொல்றேன்னா போன வருஷம் ப்ளாக் தொடங்கி அடுத்த மாசமே தமிழ்மணத்தில் இணைச்ச எனக்கு இப்ப தான் தெரியும்)
இவரின் ஆபாச/கேவலமான சொற்பொழிவினை கேட்க இதை பார்க்கவும்

இதில் என்ன கொடுமைன்னா சக பதிவர்களை வசைமாரி பொழிந்ததோடு இஸ்லாம் மதத்தை கேவலபடுத்தும் விதமாக இஸ்லாமிய முகமனை கேலி செய்து (சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக) சில வரிகளை சொல்லியிருக்கார்.

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள். //


தேவையே இல்லாமல் அந்த பதிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத வாக்கியத்தால் இஸ்லாம் மதம் இழுக்கபட்டது எதற்கு மதவெறியன் பெயரிலி???
டெரர் கும்மி ப்ளாக்கில் இந்த பெயரிலி

On behalf of tamilmanam
-/tramanitharan, k.
(-/பெயரிலி.)

என சொன்னதால் தமிழ்மணத்தின் சார்பாக அங்கே பேசியதால், தமிழ்மணத்திற்காக பேசும் போது இஸ்லாமிய முகமனை கேலி செய்ததால் இதற்கு முழு பொறுப்பு தமிழ்மணத்திற்கே!

அவரின் இரண்டாவது விளக்கமெயிலில் கீழ்காணும் படி சொல்லியிருக்கிறார்.
அதனாலேயே விளக்கம் கேட்டு மெயிலிடப்பட்டது. அதற்கு திமிர்த்தனமான, பொறுப்பற்ற, அகங்காரமான பதில் தான் திரும்பி வந்தது. //ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இரமணிதரன், தமிழ்மணம் சார்பாக என்று பின்னூட்டமிட்டிருக்கின்றாரா?
உங்களின் சாந்தியும் சமாதானம் பின்னூட்டத்திலே தமிழ்மணம் சார்பாக என்று பின்னூட்டமிட்டிருக்கின்றா?//


அதாவது அந்த பெயரிலி அந்த கேலிக்குறிய சொல்லை சொல்லும் போது "On behalf of Tamilmanam" ன்னு சொன்னாரா என உலகறிவாளித்தனமான கேள்வி கேக்குறாங்க. எப்பலாம் பின்னூட்டத்தின் முடிவில் தமிழ்மணம் சார்பாகன்னு போடுறாரோ அப்பெல்லாம் தமிழ்மணம் சார்பாகன்னு எடுத்துக்கணுமாம். எப்ப அது போடாம போடுறாரோ அப்போ தனிபட்ட சொல்லாம். லாஜிக்கா பதில் சொன்னா எல்லாரும் தல முடிய பிச்சுட்டு அலைவாங்கன்னு கணக்கு போட எந்த ஸ்கூல்ல கத்து கொடுத்தாங்க தமிழ்மண நிர்வாகிகளுக்கு?

அது மட்டுமல்ல...

தமிழ்மணத்த பத்தி எழுதுனா பெயரிலிக்கு கோபம் வருவது நியாயம் தான். ஏன்னா அவுகதேன் ஆரம்பகாலத்துல இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டதாக அவுகளே சொல்லியிருக்காக. டெரர் கும்மி சகோக்களிடம் விளக்கம் கேட்டதும் நியாயம் தான். அதுக்கு காரணமானவங்க பதில் சொல்லும் வரை பொருத்திருந்திருக்கலாம். தேவையே இல்லாம இரண்டாவதாக போட்ட கமெண்ட்டில் என்னாத்துக்கு கமெண்ட் போட்டவங்க மேல இவர் கோபத்த காமிக்கணும்?

இதான் வைரை சதீஷ் சொன்ன வார்த்தைகள்
ஐயா தமிழ்மணம் பற்றிய பயோடேடா சூப்பர்
இதுல நக்கீரன் பெயரிலி என்ன குற்றத்தை கண்டுபிடிச்சாராம்? அதுக்கு அவர் போட்ட மட்டமான, கேவலமான, இழிவான, அசிங்கமான,ஆபாசமான கமெண்ட்...........//வைரை சதீஷ் ஆஷிக்கின் பதிவிலே தமிழ்மணம் பற்றி நீங்கஇட்டபின்னூட்டத்துக்குப் பின்னாலும், காலை மூன்றரை மணிநேர வண்டியோட்டத்துக்கு முன்னாலிருந்து உங்களின் தமிழ்மணத்திலே "என் இடுகைகள் தோன்றவில்லையே" என்ற தொடர்ச்சியான அஞ்சல்களுக்குப் பின்னால் தொடர்ந்து அப்பிரச்சனையைத் தீர்க்க, நானும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால், உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.
//

என்னங்க பதில் இது? பதிவர்களுக்கு உங்க திரட்டியில ஒரு பிரச்சனை வந்தா பில்கேட்ஸா சரிபண்ணுவார்? நீங்க கஷ்ட்டபட்டாவது சரி பண்ணி கொடுக்கணும்ங்குறது தான் உங்க வேலையே.......... அத விட்டுட்டு நா அப்படி பண்ணேன் அதுனால எப்படி எனக்கெதிரா சொல்ல போச்சுன்னு கூச்சல் போடுறது உங்களுக்கு ஓஓஓஓஓஓஓவரா தெரியலையா பெயரிலி?? கொத்தனார் வீடு கட்டி கொடுத்ததுக்காக அவருக்கே கிரய பத்திரத்த கொடுக்கணுமா என்ன? உங்கள் திரட்டி மூலமா நாங்க பயன் பெற்றால் நாங்க உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்கணுமா??

ஒரு சிறுவனின் (வைரை சதீஷ் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்) சாதாரண கமெண்டை தேடி பிடிச்சு கேவலமான கடைநிலை மனிதர்களின் வார்த்தை ப்ரயோகத்துடன் தாக்கியது என்ன விதத்தில் நியாயம் சார்? இந்த வார்த்தைகளை பார்த்து நான் அதிர்ச்சியடைஞ்சேன்னு சொன்னதுக்கு
“வைரை சதீசுக்குச் சொன்ன பதிலிலே என்ன அதிர்ச்சியடையவைக்கும் மருந்து கலக்கப்பட்டிருக்கின்றது? ’’ கேக்குறார். அதாவது அது மட்டுமா நா பேசுனேன்? அத விட கேவலமா பேசியிருக்கேன். அதுனால இதுல அதிர்ச்சியாக ஒன்னுமில்லைன்னு சொல்றாரோ என்னவோ.......

என்ன எழவோ விடுங்க....

சகோ பெயரிலியிடன் சில கேள்விகள்
உங்களுக்கு இஸ்லாமியர் மேல் அப்படி என்னா சார் கோபம்?

சம்மந்தமே இல்லாம ஏன் சார் இஸ்லாமிய முகமனை கேலி செய்தீர்?

வைரை சதீஷின் மன உளைச்சலுக்கு உங்களின் பதில் என்ன?

பொறுமையாய் டெரர் கும்மி சகோதரர்கள் அங்கே உங்களுக்கு பதில் சொல்லும் போது ஆபாசவார்த்தைகளை அள்ளி பொழிந்தது எதற்கு

தமிழ்மணத்தை பற்றி சொன்னாலே உங்களுக்கே கோபம் வருதே... அப்படியிருக்க தேவையே இல்லாம எதுக்கு விகடனை இழுத்தீங்க?

விளம்பர கட்டணம் பத்தி பொய்யான தகவல் கொடுத்ததாக சொல்லி விளக்கம் கேட்டு கடைநிலை மனிதனாய் பொங்கி எழுந்தீரே எம் மதத்தை கேலி செய்வதற்காக உங்களின் விளக்கம் என்ன? இஸ்லாமியர்களின் மனதினை புண்படுத்தியதற்கான உங்கள் தரப்பு விளக்கம் எங்கே?

கடைசியாக

நீங்கள் பள்ளி கூடத்துல தான் படிச்சீங்களா?? இல்ல சாக்கடையிலேயே வளர்ந்து நேரடியா திரட்டி தொடங்குனீங்களா? ஒரு நிர்வாகியின் கிழ்தரமான கமெண்ட்களை பார்க்கும் எவர்க்கும் தோன்றும் எண்ணம் தான்.


எங்கள் முகமனை கேலி செய்ததற்காக மன்னிப்பு கேள் தமிழ்மணமே! எங்கள் சகோதரர்களை கேவலமான வார்த்தைகளால் தாக்கியதற்கு மன்னிப்பு கேள் தமிழ்மணமே பதிவர்களை அடக்கி ஆள துடிக்கும் சர்வாதிகார தமிழ்மணமே மன்னிப்பு கேள்!

முக்கியமாக தற்போது ஓட்டுபட்டை மட்டுமே நீக்கியுள்ளேன். இன்னும் 4 நாட்களுக்குள்தமிழ்மணம் அதன் அதிகாரபூர்வ வலைதளத்தில் விளக்கமும் மன்னிப்பும் கேட்கவில்லை என்றால் எனது விலகல் கடிதத்தை சமர்பிப்பேன். என்னை அடிமை படுத்தும் திரட்டியில் நீடிப்பதை கேவலமாகவே கருதுகிறேன்!!சக பதிவ சகோக்களே.....
நம்மை நம்பி தான் திரட்டிகள். நாம் இல்லையேல் எந்த திரட்டியும் இயங்காது. நம் பதிவுகளை வைத்து தான் அவர்களின் வருமானம். அப்படியிருக்கையில் நம்மை கேவலபடுத்தும், நம்மை அடிமைபடுத்த நினைக்கும் பெயரிலி போன்றோர்க்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டாமா? இன்று யாரோ ஒரு பதிவர்க்கு நடந்த அவமானம் நாளைக்கு நம்மை நோக்கி வராது என்பதற்கு என்ன நிச்சயம்? ஒரு நல்ல விஷயத்திற்காகவாவது குரல் கொடுக்க முன்வாருங்கள்...... மனிதர்களாய் !!!!!!!! தன்மான முள்ளவர்களாய் !!!!


தமிழ்மணத்திற்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


1.
தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2..
தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.

தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!



4.
தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!



5.

தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



6.
தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

7.

தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



8.

தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



9.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க 


6 Responses to “தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???”

ஆமினா said...
October 17, 2011 at 1:03 PM

தொடர்வோன்


Unknown said...
October 17, 2011 at 1:32 PM

சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்

இன்றோடு அதை தூக்கி எறிவோம்


HajasreeN said...
October 17, 2011 at 1:51 PM

என்னோட எதிர்ப்பு ..........



http://alturl.com/ti4zq


mohamedali jinnah said...
October 17, 2011 at 4:33 PM

"தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
Abdul Basith at ப்ளாக்கர் நண்பன் - 8 hours ago
நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி. மேலும் படிக்க...


mohamedali jinnah said...
October 17, 2011 at 5:12 PM

Please visit
http://seasonsnidur.blogspot.com/2011/10/blog-post_17.html
)

தமிழ்மணம் திரட்டி. பற்றி பதிவர்கள்...
நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி. மேலும் படிக்க.."தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?.
விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
சீ தமிழ் மனமே ............................
தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


jiff0777 said...
October 18, 2011 at 3:56 PM

Well said, நீ எந்த மதமாக இருந்தாலும் மற்றைய மதங்களைக் கேவலப் படுத்த எத்தநிக்காதே. பர்ஹான், உங்களுக்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து நான் வியக்கின்றேன். உங்களைப் போல எனக்கும் ஒரு ப்ளாக் இல்லை என்று சில சமயம் நான் பொறாமைப் பட்டதும் உண்டு. புதிதாக நானும் ஒரு தமிழ் ப்ளாக் எழுத ஆரம்பித்து உள்ளேன். அது, "தமிழில் தொழிநுட்பம்" உங்களுக்கு கிடைக்கும் ஆதரவில் ஒரு துளியை எனக்கும் கொடுங்கள். http://tamilspicytec.blogspot.com/


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |