எப்படி படிக்கலாம்? நகைச்சுவை பதிவு



சிறுவயது முதல் பள்ளியில் படிக்கும் போது ஒரு இலட்சியத்தினை மனதில் வைத்து டாக்டர் ஆகவேண்டும் ,போலிஸ் ஆகவேண்டும் கணக்காளர் ஆகவேண்டும் என பல கனவுகளோடு பள்ளி பருவத்தினையும் கல்லூரி பருவத்தினையும் முடித்திருப்போம் . ஆனால் தாம் கொண்ட இலட்சியத்தின் படி தமது கல்விதகமையினை வளர்த்து கொண்டு உயர் தகைமைகளை அடைவோர் நம்மில் சிலரே .

இந்த பிரச்சினைகளுக்கு  முற்றுப்புள்ளி  வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கோடு பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டு பிடிக்க பட்ட இந்த செயல்  முறைகளோடு உங்கள் கல்வியினை நீங்கள் மேற்கொண்டால் உரிய இடத்தினையும் உங்கள் இலட்சிதினையும் அடையலாம் ...அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் இதோ...


1 . நீங்கள் டாக்டர் அல்லது இஞ்சினியர் ஆகவேண்டுமா எப்போதும் முதல் வரிசை பெஞ்சில் மட்டுமே அமருங்கள் நீங்கள் 1st class இல் பாசாகி உங்கள் இலட்சியத்தினை அடையலாம் .




2 . முதல் வரிசையில் உள்ளவர்களை  நீங்கள் கண்ட்ரோல் செய்ய வேண்டுமா ? எப்பொழுதும் இரண்டாம் வரிசையில் அமருங்கள் ஒரு  administrator ஆகி இவர்களை உங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரலாம் .


3 . முதல் இரு வரிசையில் உள்ளவர்களும் கண்ட்ரோல் செய்ய வேண்டுமா மூன்றாம் வரிசையில் அமருங்கள் ஒரு அரசியல் "வியாதி " ஆகி இவர்களை உங்கள் கட்டுக்குள் கொண்டுவரலாம் .


4 . முதல் மூன்று வரிசையையும் உங்கள் கட்டு பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமா ? எப்பொழுதும் கடைசி வரிசையிலேயே  அமருங்கள் ஒரு ஊர்போற்றும் ரவ்டி யாக உருவெடுத்து எல்லாரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்.







நீங்கள் எந்த வரிசையில் அமரவேண்டும் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் . உங்கள் இலட்சியங்களை அடைய எனது வாழ்த்துக்கள் .

5 Responses to “எப்படி படிக்கலாம்? நகைச்சுவை பதிவு”

palane said...
November 24, 2011 at 3:29 PM

என்ன கொடுமை சார்


rajamelaiyur said...
November 24, 2011 at 3:59 PM

பள்ளி போகாமல் பாஸ் பன்னமுடியாதா ?
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்


rajamelaiyur said...
November 24, 2011 at 4:00 PM

எதுவும் படிக்கலானா .. ப்ளாக் ஆரம்பிக்கலாம்
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்


கோகுல் said...
November 24, 2011 at 9:48 PM

நீங்க எந்த பெஞ்சுல ஒக்காந்து யோசிச்சீங்க?


பாலா said...
November 25, 2011 at 6:54 AM

அப்போ முதல் வரிசையில் அமர்ந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியுமா?


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |