கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா?

ஆரம்பிப்போமா? ஓகே! கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா? எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கி வைத்துள்ளது. சிலர் தெரிந்திருக்கலாம். இது பற்றியே தெரியாதவர்களும் நம்மில் இருக்கலாம், என்னைப் போல். இது மாதிரியான சில கூகிள் சுவாரஸ்யங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
நான் சொல்லப் போகும் அனைத்து மறைமுக குறியீடுகளையும் (secret codes) கூகிள் சர்ச் இல் இட்டு, "I'm Feeling Lucky" என்ற கூகுளின் சர்ச் ஐத் தொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் கூகிள் இன்ஸ்டன்ட் சர்ச் (instant search) அச்டிவே செய்திருந்தால், நீங்கள் இந்த சொற்களை டைப் செய்தவுடனோ, பேஸ்ட் செய்தவுடனோ, என்டர் (enter) பட்டன் ஐக் கிளிக் செய்ய முன் வரும் போப்அப் இல், "I'm Feeling Lucky" என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டியது முக்கியம். அப்படி இன்ஸ்டன்ட் சர்ச் (instant search) ஆக்டிவ் செய்யாமல் இருந்தால், சுலபமாக "I'm Feeling Lucky" இல் கிளிக் செய்தாலே போதுமானது.

Google Gravity இது உங்களது கூகிள் சர்ச் தளத்தை உடைத்து நொறுக்கி, எல்லாப் பாகங்களையும் கீழே விழச் செய்திடும். தேவை பட்டால், உங்களது மௌஸ் (mouse) உதவியுடன் பாகங்களைத் தூக்கி எறியலாம்.
Google Sphere இது உங்களது கூகிள் சர்ச் இல் உள்ள பாகங்களை, ஆட வைக்கும்.
Google Loco கூகிள் துள்ளிப் பாய்ந்து நடனமாடுவதை பார்க்க வேண்டுமா?
Annoying Google இது உங்களது கூகிள் சர்ச் இல் உள்ள எழுத்துக்களை மாற்றி மாற்றிக் காட்டும்.
Epic Google இது உங்களது கூகிள் சர்ச் இல் உள்ள எழுத்துக்களை தொடர்ச்சியாக பெரிதாக்கும். கடைசியில் எழுத்துக்கள் கணணி மொநிடோர் ஐ விட்டு வெளியே வந்துவிடும்.
Google Pacman கூகிள் இல் பக்மான் விளையாட வேண்டுமா?
Who's The Cutest யார் அழகானவர் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?
Google Pirate கூகிள் இன் பைரேட் வேர்சன் பார்க்க வேண்டுமா?
Google Hacker உங்களது கூகிள் கணக்கு களவாடப் பட்டால் எவ்வாறு இருக்கும். இங்கே பார்த்துக்கொள்ளுங்கள்.
Google Rainbow கூகிள் இல் உள்ள அனைத்து பாகங்களும் வானவில் வண்ணமாக வேண்டுமா?
Google Reverse உங்களுக்கு தலை கீழாக மாறிவிட்டதா? அல்லது தலை சுத்துகிரத? இலகுவாக தலை கீழ் கூகிள்.

எல்லாமே கண்ல பட்டவை. இன்னும் இருக்கின்றது. இன்னுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

12 Responses to “கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா?”

கவிதை வீதி... // சௌந்தர் // said...
December 3, 2011 at 10:16 AM

இம்புட்டு விஷயம் இருக்கா...

போர் அடிக்கும்போது இப்படி கூகுலை வச்சி விளையாட வேண்டியதுதான்...

தகவலுக்கு நன்றி


திண்டுக்கல் தனபாலன் said...
December 3, 2011 at 10:23 AM

நானும் கொஞ்ச நேரம் விளையாடிப் பார்த்தேன்.
நல்லாத்தான் இருக்கு.... பகிர்விற்கு நன்றி நண்பரே!

நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"


rajamelaiyur said...
December 3, 2011 at 12:13 PM

தகவலுக்கு நன்றி .. இன்னும் நிறைய இருக்கு .. நான் இது போல ஒரு பதிவு போட்டுள்ளேன்
http://rajamelaiyur.blogspot.com/2011/09/blog-post_21.html


rajamelaiyur said...
December 3, 2011 at 12:13 PM

இன்று ...

நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ?


palane said...
December 3, 2011 at 6:25 PM

கூகுலை வச்சு இப்படியும் விளையாடலாமா?


vimalanperali said...
December 4, 2011 at 11:01 AM

வியப்பாக உள்ளது .பகிவுக்கு நன்றி


ஆமினா said...
December 4, 2011 at 5:36 PM

அட இவ்வளவு விஷயம் இருக்கா?


Anonymous said...
December 7, 2011 at 4:10 PM

தங்கள் இணையதளம் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் இணையதளம் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள். www.hotlinksin.com பதிவுலகில் ஒரு புதிய அனுபவம்.


ம.தி.சுதா said...
December 25, 2011 at 6:17 PM

இதைத் தான் உண்மையிலேயே தன்னடக்கம் என்று சொல்வார்களோ தெரியல...

இம்புட்டையும் வச்சிகிட்ட பேசாமல் இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு


Anonymous said...
January 11, 2012 at 1:11 PM

போட்டிக்கு பலர் வந்தா தன்ர இமேச்ச காப்பாத்த இதெல்லாம் செய்யவேண்டி இருக்கு..

என்னுடைய மொய்...
நான் கண்ட கலாசாரமாற்றம்... உண்மைப்பதிவு (யாழ்ப்பாணத்தில்)


NAGARJOON said...
September 29, 2018 at 2:52 PM

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Builders In Trivandrum
Flats In Trivandrum
Apartments In Trivandrum
Flats Near Technopark
Villas In Trivandrum
Budgeted homes Trivandrum
Flats In Thiruvananthapuram
Builders In Thiruvananthapuram
Builders near Technopark
Apartments near Technopark
Budgeted homes Thiruvananthapuram


عبده العمراوى said...
December 19, 2020 at 10:15 PM


شركة تنظيف مجالس بنجران
شركة تنظيف فلل بنجران
شركة مكافحة النمل الابيض بنجران


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |