கருப்பனின் கரு நாக்கு...


என்னுடடைய முந்தய கத்தார் 2022 என்ற பதிவில் நான் சொன்னது போல் 2022 ஆம் ஆண்டின் FIFA வின் உலக கால்பந்தாட்ட போட்டியின் போட்டியை  நடத்தும் நாடாக கத்தார் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக FIFA வின் தலைவர் Joseph S. Blatter தெரிவித்தார்.அதே போல் 2018 ஆம் ஆண்டின் போட்டியை நடத்தும் நாடாக ரஸ்யா வும் தெரிவு செய்யப்பட்டுள்ளது நேற்று சுவிசர்லாந்தின் சூரிச் இல் நடைபெற்ற போட்டி நடத்தும் நாடுகளை தெரிவு செய்யும் போட்டியில் அமெரிக்காவுடன் கடும் போட்டியின் மத்தியில்
கத்தாரும் ஸ்பெயின்  மற்றும் போர்த்திக்களின் கடும் போட்டியின் மத்தியில் ரஷ்யாவும்  தெரிவு செய்யப்பட்டுள்ளன.

22 உறுபினர்களை கொண்டகுழுவில்  நாடுகளை தெரிவு செய்ய நடந்த வாக்கெடுப்பின் மூலமே இவ்விரு நாடுகளும் தெரிவுசெய்யப்பட்டன.
22 உறுபினர்களில் 12 வாக்குக்கள் பெற்றால் மட்டுமே போட்டியை வெற்றி பெற்றதாக fifa அமைப்பு தெரிவிக்கும் அதன் அடிப்படையில்,

முதல் வாக்கெடுப்பு 2018 ஆண்டிற்கான போட்டியை நடத்தும் நாட்டினை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில்

முதல் சுற்றில் ரஷ்யா 9 ,ஸ்பெயின்/போர்த்துக்கல் 7 , நெதர்லாந்து/பெல்கியம் 4 , இங்கிலாந்து ௨ வாக்குகள் பெற்றன  எந்த ஒரு நாடும் பெருன்பான்மை வாக்குகளை பெறாததால் இங்கிலாந்து போட்டியில் இருந்து விலக்கப்பட்டு இரண்டாம் சுற்று போட்டி நடைபெற்றது இதில் ரஷ்யா 13 வாக்குகளை பெற்று போட்டியை  நடத்தும் நாடக தெரிவு செய்ய பட்டது

இரண்டாம் வாக்கெடிப்பில் 2022 ஆம்  ஆண்டிற்கான போட்டியை நடத்தும் நாட்டினை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில்

முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவும் இரண்டாம் சுற்றில் ஜப்பானும் மூன்றாம் சுற்றில் தென்கொரியாவும் வெளியேற்றப்பட்டு நான்காம் சுற்றில் அமெரிக்காவுடன் கடும் போட்டியுடன் கட்டார் 14 வாக்குகள் பெற்று போட்டியை நடத்தும் நாடக தெரிவு செய்ய பட்டது.

("கருப்பா உனக்கு கரு நாக்குடா" என இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நண்பரொருவர் தொலைபேசியில்  தெரிவித்தார்  அதையே தலைப்பாக போட்டு விட்டேன் )

11 Responses to “கருப்பனின் கரு நாக்கு...”

Anonymous said...
December 3, 2010 at 12:10 PM

Best f luck Qatar......


pichaikaaran said...
December 3, 2010 at 6:37 PM

நண்பர் சொன்னது உண்மைதான்


THOPPITHOPPI said...
December 3, 2010 at 9:04 PM

அக்டோபஸ் நாக்கோ?


FARHAN said...
December 3, 2010 at 9:32 PM

Anonymous நன்றி வருகைக்கு கத்தார் இப்பொழுதே கலைகட்ட தொடங்கிவிட்டது


FARHAN said...
December 3, 2010 at 9:33 PM

பார்வையாளன் ... அவன் என் நண்பன்...


FARHAN said...
December 3, 2010 at 9:34 PM

THOPPITHOPPI ...ஒரு வேலை அப்படியும் இருக்குமோ.


சௌந்தர் said...
December 4, 2010 at 9:19 AM

("கருப்பா உனக்கு கரு நாக்குடா" என இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நண்பரொருவர் தொலைபேசியில் தெரிவித்தார் அதையே தலைப்பாக போட்டு விட்டேன் )////

சரி சரி உங்க நாக்கை கொஞ்சம் காட்டுங்க


FARHAN said...
December 4, 2010 at 10:07 AM

சௌந்தர்..என்ன இது சின்ன புள்ள தனமா?


எம் அப்துல் காதர் said...
December 4, 2010 at 5:04 PM

நாக்கு கருப்பா இருந்தா என்ன ஏதும் பிரச்சினையா ?? ஹி..ஹி..


mohamedali jinnah said...
December 10, 2010 at 5:09 PM

கரு நாக்கு...அப்படி ஒன்றும் ஆண்டவன் ஒன்றும் படைக்கவில்லயே !
காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது என்று சொல்வார்கள்


mohamedali jinnah said...
January 11, 2011 at 6:14 AM

http://seasonsali.wordpress.com/2011/01/10/introducing-qatar/#more-2161
Introducing Qatar


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |