தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம்.


நான் பதிவுலகத்திற்கு  வந்து ஆறுமாதங்கள் ஆகின்றது நிறைய பதிவர்களின் பதிவுகளை தேடி தேடி போய் பார்வையிடவும் செய்கின்றேன் ,பல பதிவர்கள் எனது பதிவுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிபதுடன் ஒட்டு போட்டு பின்னூட்டமிட்டு எனது பதிவுகளை பல திரட்டிகளில் பிராபலமடயவும் செய்கின்றனர்.

ஆனாலும் தனிப்பட்ட ரீதியில் அவர்களை எனக்கோ என்னை அவர்களுக்கோ தெரியாது குறிப்பாக சொல்ல போனால் பதிவுலகில் குறைந்த பட்சம் ஒருவரின் சொந்த விபரம் கூட எனக்கு தெரியாது ,இதற்கு கொஞ்சம் கவலையுடன் தான் இருந்தேன் ஆனால் இந்த கவலைகளுக்கு விடை கொடுக்கும் முகமாக நண்பர் பிரபு அவர்கள் ஒரு முயற்சியினை எடுத்துள்ளார் அணைத்து பதிவர்களும் சங்கமிக்கும் வகையில் அணைத்து பதிவர்களின் முழு விபரங்களையும் ஒரே தளத்தில் பார்வியுடும்  முகமாக "தமிழ் வலைபதிவர்களின் அடையலாம்" எனும் தளத்தினை உருவாக்கியுள்ளார் .

இந்த தளம் பதிவர்களை இணைக்க சிறந்த பாலமாக இருக்கும் என நினைகின்றேன் .

இந்த தளத்தில்  என்னுடைய விபரங்களை அறிய இங்கே அழுத்தவும் 


பதிவர்கள் தங்களின் விபரங்களையும் கொடுத்து இந்த தலத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.

இந்த தளத்தில் என்னுடைய சுய விபரங்களை இணைத்துகொண்டமைக்கு நண்பர் பிரபு அவர்களுக்கு நன்றிகள் ....

5 Responses to “தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம்.”

Lakshmi said...
January 23, 2011 at 8:34 AM

ஆமாங்க நீங்க சொல்லியிருப்பது ரொம்பவே கரெக்ட் தான். எல்லாருமே முகம் அறியா நண் பர்கள்தான். நண்பர் பிரபு நல்ல முயற்சியில் இறங்கி இருக்கார்.அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.


டி.கே.தீரன்சாமி. said...
January 23, 2011 at 8:50 AM

ஆமாம்,தலைவரே!நல்ல செய்தி சொன்னீர்கள்.உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கம் ஒண்று தேவை! இது காலத்தின் கட்டாயம்.தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவற்காக-டி.கே.தீரன்சாமி.
http://theeranchinnamalai.blospot.com/


nidurali said...
January 23, 2011 at 9:31 AM

உங்களை நேரில் பார்த்ததில்லை ஆனால் தனிப்பட்ட முறையில் உங்களை எனக்கு நன்றாக தெரியும் ஆளை
பார்த்து தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை . இதற்கு பெயர் டெலிபதி .உன்னை நினைத்தேன் நீ வந்தாய் என்பது அறிவோம் .இது இறைவன் தந்த ஆற்றல். பிசிரந்தையார் நட்பு போல் இது. சொல்ல போனால் பதிவுலகில் குறைந்த பட்சம் ஒருவரின் ஆற்றல் அறிய ஒரு நிமிடம் போதும் .ஒரு பானை சோற்றுக்கு பதம் பார்க்க ஒரு சோறு போதும் . உங்களின் ஒரு கட்டுரை போதும். மேலோட்டமாக படிப்பதும் ,படித்ததை ரசிப்பதும் ,படித்ததை அப்படியே விழுங்கி ஆழ்மனதில் காலம் உள்ளவரை அழியாமல் வைத்துக் கொள்வதும் உண்டு .உங்கள் கட்டுரை ஒன்று கூடவா உள் மனதில் உறையாமல் இருக்கும் ! இன்னும் எழுதலாம் ஆனால் அது ஒரு கட்டுரையாகிவிடும் .பின்பு நானே அதனை காபி அண்ட் பேஸ்ட்(copy and paste) செய்து என் வலைப்பூவில் போட்டு விடுவேன் .வேண்டாம் இந்த வம்பு !
நீடூர்அலி


asiya omar said...
January 23, 2011 at 8:16 PM

உங்கள் ப்ளாக் சூப்பர்.பகிர்வுக்கு நன்றி.


சிவ.சி.மா. ஜானகிராமன் said...
June 24, 2011 at 2:48 PM

மிக்க நன்றி..

தங்களால் - நானும்
தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம் - இணைந்து கொண்டேன்..

http://sivaayasivaa.blogspot.com


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |