தண்ணீரில் இயங்கும் கார் இலங்கை வாலிபர் சாதனை !


பெட்ரோல் டீசல் விலைகளை வைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரசாங்கம் கைவைத்து பூச்சாண்டி காட்டும் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இலங்கை வாலிபரான 'துஷார ஹெதிரிசிங்க " சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார் .




ஆம் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார் இந்த இளைஞர் தமது சோதனை முயற்சியாக 3 லீடர் தண்ணீரை எரிபொருளாக பயன் படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இந்த காரில் இல்லை என்பதாகும் . 

வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முற்சிகளை மேற்கொண்டும் இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்ததாக தெரிவிற்கும் துஷாரவிற்கு உள்நாட்டில் இவரை ஊக்குவிக்கவும் இந்த தொழிநுட்பத்தை மேம்படுத்தவும் யாரும் முன்வராதது வேதனையான உண்மையாகும் .

இவரது முயற்சி வெற்றி பெறவும் இந்த தொழிநுட்பம் மிக சீக்கிரமாக மக்கள் பாவனைக்கு கிடைத்திடவும் துஷாரவை வாழ்த்திடுவோம் .

இது தொடர்பான காணொலி கீழே 





20 Responses to “தண்ணீரில் இயங்கும் கார் இலங்கை வாலிபர் சாதனை !”

ம.தி.சுதா said...
February 13, 2011 at 8:52 AM

ஃஃஃஅவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்ததாக தெரிவிற்கும் துஷாரவிற்கு உள்நாட்டில் இவரை ஊக்குவிக்கவும் இந்த தொழிநுட்பத்தை மேம்படுத்தவும் யாரும் முன்வராதது வேதனையான உண்மையாகும்ஃஃஃஃ

அருகிலுள்ள போது அருமை தெரிவதில்லை... வாழ்த்துக்கள்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..


Unknown said...
February 13, 2011 at 9:41 AM

துஷார ஹெதிரிசிங்க அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி


mohamedali jinnah said...
February 13, 2011 at 10:14 AM

இது உங்கள் சிந்தனையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
நீங்கள் நினைத்தால் உங்களாலும் முடியும். முயற்சி செய்யுங்கள். முயற்சி உங்கள் பக்கம் முடிவு இறைவன் பக்கம்


MANO நாஞ்சில் மனோ said...
February 13, 2011 at 11:19 AM

வாழ்த்துக்கள்..............
நம்ம ராமர் பிள்ளையின் கதி வராம இருக்கணும்....


Unknown said...
February 13, 2011 at 1:18 PM

ம்ம் நானும் கேள்விப்பட்டேன்..சந்தோசம்..


Ram said...
February 13, 2011 at 3:17 PM

பாராட்டுகள் அவருக்கு..


FARHAN said...
February 13, 2011 at 5:53 PM

தண்ணீரில் ஓடும் வாகனம் பாவனைக்கு வந்து விட்டால் இலங்கை போன்ற வளரும் நாடுகளின் 90% வீதமான பிரச்சினைகள் முடிவிற்கு வரும்
அதனனல் துஷரவிற்கு ஆதரவு தெரிவிப்போம்


இராஜராஜேஸ்வரி said...
February 13, 2011 at 6:29 PM

துஷார ஹெதிரிசிங்க அவர்களுக்கு பாராட்டு


தமிழ்வாசி பிரகாஷ் said...
February 13, 2011 at 7:56 PM

இந்த கண்டுபிடிப்பு கண்டிப்பாக உலகிற்கு தேவை.

இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி


சக்தி கல்வி மையம் said...
February 14, 2011 at 8:14 AM

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்....


பாட்டு ரசிகன் said...
February 14, 2011 at 10:06 AM

இது எப்ப பாஸ் இந்தியாவுக்கு வரும்.. பெட்ரோல் போடடு தாங்க முடியல..


Anonymous said...
February 14, 2011 at 1:29 PM

http://netcopycats.blogspot.com/2011/02/blog-post_14.html படிக்கவும்.

இது பழைய செய்தி!!!2008இல் வெளியானது!
இவர் ஒரு ஏமாற்றுக்காரர் எனக் கைது செய்யப்பட்டதைப் போடவில்லையே!!!


குறையொன்றுமில்லை. said...
February 14, 2011 at 8:17 PM

பாராட்டுக்கள், சாதனை யாளருக்கு.


Jayadev Das said...
February 15, 2011 at 9:56 AM

எத்தினை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?


FARHAN said...
February 15, 2011 at 11:23 AM

பணி சுமை காரணமாக கருத்துக்களுக்கு பதில் தர முடியவில்லை பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்


FARHAN said...
February 15, 2011 at 11:36 AM

இணைய உண்மைகள் said... 13

http://netcopycats.blogspot.com/2011/02/blog-post_14.html படிக்கவும்.

இது பழைய செய்தி!!!2008இல் வெளியானது!
இவர் ஒரு ஏமாற்றுக்காரர் எனக் கைது செய்யப்பட்டதைப் போடவில்லையே!!!



//உங்களின் கருத்துக்களை வரவேற்கின்றேன் ..அவர் கைது செய்ய பட்ட செய்தி நீங்கள் சொன்ன பின் தன எனக்கு தெரியும் அதனை பற்றி செய்திகளை தேடிபார்த்து அதனை பற்றி விரிவாக எழுதுகின்றேன் நன்றி தங்கள் கருத்திற்கு மற்றும் இன்னொரு கருதும் உண்டு அதனை நீங்கள் மறுக்க மாடீர்கள் என நம்புகின்றேன் மூலிகை பெட்ரோல் புகழ் திரு ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பும் இந்திய அரசினால் போலியென சொல்ல பட்டு கைது செய்ய பட்டு தற்போது இந்த விடயங்களில் சில அரசியல் தலைவர்கள் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் சில வெளிநாட்டு விஞ்ஞானிகள்இவருன் கண்டுபிடிப்பை உண்மையா என சொல்லி இவரை பாராட்டி காப்புரிமை பெற சிபாரிசு செய்துள்ள விடயத்தினையும் நீங்கள் யாபகத்தில் வைத்க்க்கொல்லுங்கள் ...

மற்றும் இந்த பதிவிற்கு எதிராக தங்கள் எழுதிய பதிவில் என்னுடைய இந்த பதிவினை திருடி வெளியீட்ட லங்காசிறி http://www.z9tech.com/view.php?22AOld0bc990Qd4e3KMC202cBnB3ddeZBnf203eCAA2e4U09racb3lO442 பற்றி எனக்கு அறிய தந்தமைக்கு நன்றிகள்

ஆனால் தங்கள் கருத்தில் நீங்கள் குறிப்பிட்ட "ஒரு சிங்கள வாலிபர் என்பதற்காக இது எழுதப்படவில்லை, இதுவே அந்த வாலிபர் உலகில் முதற்தடவையாக கண்டுபிடித்திருந்தால் பாராட்டத்தக்கது." நான் என்னுடைய பதிவில் எந்த இடத்திலும் சிங்கள வாலிபர் என சொல்ல வில்லையே இலங்கை தான் சொன்னேன் இலங்கையில் பிறந்த எனக்கு இலங்கை வாலிபர் என்பதில் சொல்வதில் தன கர்வம் இருக்கின்றதே தவிர சிங்கள வாலிபர் என குறிப்பிட்டு இனவேரியினை தூண்டும் வகையில் பதிவுகளை எழுதாதீர்கள் .///


goma said...
February 15, 2011 at 4:55 PM

அருமையான கண்டுபிடிப்பு அலட்சியமான அரசின் போக்கு


ஆகுலன் said...
February 15, 2011 at 5:22 PM

இவர் இதை வெளிநாட்டு நிறுவனத்திற்கே விற்ருக்கலாம்............


Anonymous said...
February 15, 2011 at 7:37 PM

நன்றி பார்கான், //சிங்கள வாலிபர்// என்னும் பந்தியை நீக்கி உள்ளேன், மாற்றவர்களுக்கு அது இனவெறியைத் தூண்டுவதாக அமையும் என்று தாங்கள் நினைப்பின், என் பிழையை மன்னிக்கக் கோருகின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இது எழுதப்பட்டது லங்காசிறி இணையதளத்தின் முகமூடியைக் கிழிக்கவே அன்றி குறிப்பிட்ட வாலிபருக்கோ அவரது செய்திக்கோ எதிராக அல்ல!!
உண்மையிலேயே அவரது கண்டுபிடிப்பு உண்மை அல்லது நன்மை பயக்கும் எனின் மகிழ்வுடன் வரவேற்பதில் நானும் ஒருவன்!

அவர் கைது செய்யப்பட்டது (2008இல்) ஆதரபூர்வத்துடன் வெளியாகி உள்ளது, பின்னர் மேற்கொண்டு(2011இல்) இதனைத் தொடர்கின்றார் என்பது பற்றி எங்கும் இல்லை! நீங்கள் அறிந்தால் குறிப்பிடுங்கள்..

தாங்கள் இந்தவிடையத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூறமுடியுமா? நான் முதன் முதலில் பார்த்தது லங்காசிறியில் தான்... அவர்களின் தகவல் திருடும் உண்மையை உடைக்கவே எனது தளம் இயங்குகின்றது, உங்கள் போன்ற ஆக்கப்பதிவுகளை வரவேற்கின்றேன். பதிவுகளைத் திருடுபவர்களுக்கு எதிரானதே எனது சேவை, மேலும் அவர்கள் ஏற்கனவே வெளியிட்ட உண்மையற்ற செய்திகளால் மனமுடைந்து இதுவும் அத்தகையது என்று எண்ணி கூகிளில் தேடும்போது உங்கள் தளம் கிடைத்தது. அவர்களுக்கு எத்தனை முறை அவர்களின் பழைய செய்திகளின் உண்மையற்ற தனத்தைச் சுட்டிக்காட்டியும் கேட்பதாக இல்லை.
நன்றி தங்களுக்கு...


FARHAN said...
February 15, 2011 at 10:30 PM

இணைய உண்மைகள் said...

நண்பர் ஒருவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட காணொளி மற்றும் காணொளியில் வந்த அதன் சிங்கள மொழியின் தமிழாக்கமே இந்த பதிவு ...
இதன் உண்மை தன்மை பற்றி ஆராய பணி நிமித்தமாக நேரம் கிடைக்கவில்லை விரைவில் முளுவிபரங்களுடன் இந்த செய்தியை பற்றி முளுதகவளை பதிவாக எழுதுகின்றேன்

மற்றும் என்னுடைய இந்த பதிவை திருடி வெளியிட்ட லங்கா சிறி பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள் மற்றும் கேட்கப்பட்ட கேள்விக்கு தெளிவான பதிலை தந்து என்னுடைய கருத்துக்களை ஏற்ருகொண்டைமைகும் நன்றிகள்


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |