Family Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி?


நாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப்பது எங்கள் மனைவியே!


சிலர் மிகவும் சாதுவானவர்கள் சிலர் மிகவும் கோபக்காரர்கள். சிலர் நல்லவர்கள், சிலர் கெட்டவர்கள். அதே இயல்புகளுடனும் நடத்தைகளுடனும் மனைவியும் அமைவாள் என்பது மிகவும் அரிதான ஒரு விடயம். சில சில சிறிய விடயங்களை நாம் மனைவிக்கு விட்டுக் கொடுப்பதன்மூலம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.


  • அன்புடன் ஒருமுறையாவது அணைத்தல்.
  • விடை பெறும்போதும், தொலைபேசியில் பேசி முடியும்போதும், வெளியே செல்லும்போதும் “I love you என்று சொல்லிக்கொள்ளுதல்.
  • வீட்டில் உள்ள சிறிய வேலைகளை தாமாக முன்வந்து செய்தல். (உம்: குப்பைகளை எடுத்து வீசுதல்)
  • குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்வதன் மூலம், மனைவிக்கு ஓய்வு கொடுத்தல்.

  • மனைவிக்கு விருப்பமான சில சந்தர்ப்பங்களுக்கு இடமளித்தல். (நீங்கள் குளிர்பானம் அருந்த விரும்புவதாயின், மனைவி தேநீரை விரும்பினால், நீங்களும் தேநீரைத் தென்ர்ந்தெடுத்து அருந்துதல்)
  • அவளது நாளைப் பற்றியும், நடந்தவற்றைப் பற்றியும் கொஞ்சம் நிதானமாகக் கேட்டல்.
  • வாரத்தில் ஒருமுறையாவது, வெளியே இரவு நேர உணவுக்குக் கூட்டிச் செல்லுதல்.
  • தொலைக்காட்சியில் மனைவிக்கு விருப்பமான நிகழ்ச்சிகளையும் சேர்ந்து பார்த்தல்.
  • சில வாக்குவாதங்களில் அவளுக்கு விட்டுக்கொடுத்து, அவளை வெல்லச் செய்தல்.
  • வீட்டினுள் வீசிக்கிடக்கும் பொருட்களைக் கண்டால், எடுத்து ஒதுக்கி வைத்தல்.
  • விடுமுறை நாட்களில் கூடுதலான நேரத்தை மனைவியுடன் கழித்தல்.
  • அடிக்கடி அவளுக்குப் பிடிக்கக் கூடிய சில பரிசுப்போருட்களைக் கொண்டுவருதல்.
  • அவளது புதிய ஆடை, பாதணி மற்றும் ஏனைய மாற்றங்கள் பற்றி உங்களது சாதகமான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
  • சிறிய நோய் வந்தாலும், பக்கத்திலிருந்து பார்துக்கொள்ளுதல்.
  • முடியுமான சந்தர்ப்பங்களில், சமையல் வேளைகளில் உதவி செய்தல்.
  • வெளியில் சென்றபோதும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, தொலைபேசியில் தொடர்புகொள்ளுதல்.
  • வெளியில் செல்லும்போது, அவளது ஒரு கையைப் பிடித்துக்கொண்டு நடத்தல்.
  • ஒவ்வொரு நாளும் முதலாவதுமுறை அவளைக் காணும்போது, புன்னகை செய்தல்.
  • உங்களுக்குத் தெரிந்த ஒன்றை அவள் சொல்வாதாயினும், அப்பொழுதுதான் நீங்கள் அதை அறிவதுபோல், அவளைப் பேச விடுதல்.
  • அவள் சோகமாக இருக்கும்போது, சொல்ல வருவதை நன்றாக அவதானத்துடன் கேட்டல்.
  • மாலை நேரத்தில் ஓய்வெடுக்கும்போது, தொந்தரவு செய்ய வேண்டாம்.
  • வீட்டில் ஏதாவது பொருள் இல்லை என்றால், உடனே அதை சென்று வாங்கிக் கொடுத்தல்.
  • எப்பொழுதும் நிதி சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கும்போது அவளுக்கு ஏதாவது தேவை இருக்கிறதா என்று கேட்க மறக்க வேண்டாம்.
  • அடிக்கடி இருவரையும் சேர்த்து புகைப்படங்கள் எடுத்து வைத்தல்.

  • முடியுமானால், மாதத்துக்கு ஒருமுறையாவது அவளுக்கு முன்னாள் எழுந்து நீங்கள் காலை உணவைத் தயாரித்தல்.
  • இரவு நேரங்களிலாவது முத்தமிடுதல்.
  • உணவு உண்டதன்பின் எச்சில்களை அகற்ற சிறிதளவாவது உதவுதல்.
  • வெளியே கொஞ்ச தூரம் தனியே நடக்க அழைத்தல்.
  • சண்டை பிடித்தது, சிரித்தது, தவறுகள், கோபங்கள், விட்டுக்கொடுத்தல் போன்றவற்றை மாதத்துக்கு ஒருமுறையாவது கலந்துரையாடுதல்.
  • அவள் உறங்கிக் கிடக்கும்போது, ஒரு போர்வையால் அவளைப் போத்திவிடுதல்.
  • அவள் நீண்ட நேரம் தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தாலும், என்னவென்று கேட்க வேண்டாம்.
  • அடிக்கடி அவளுக்குப் பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்தல்.
  • அவள் குளிரில் தவித்தால், உங்களது குளிர்தாங்கியைக் கொடுங்கள்.
  • அடிக்கடி அழகான மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் போன்றவற்றை அனுப்பிக் கொள்ளுதல்.
  • அவள் அழ வேண்டிய சந்தர்ப்பங்களில் அழ அனுமதித்தல்.
  • வேலை முடிந்ததும் நேரத்தோடு வீட்டுக்கு வருதல்.
  • எப்பொழுதும் உட்காரும்போது, அவளுக்குப் பக்கத்தில் அமர்தல்.
  • உடலுறவு தவிந்த மற்றைய நேரங்களிலும் அடிக்கட்டி “நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
  • எப்பொழுதும் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
  • விட்டை அலங்கரிக்க அவளது கருத்துக்கு முன்னுரிமை கொடுத்தல்.
  • வெளியே நண்பர்களுடன் செல்லும்போது, திருமண வைபவங்களுக்கு அல்லது வேறு இடங்களுக்குச் செல்லும்போது, சென்ற இடத்திலிருந்து அவளை நினைவில் வந்ததைக் காட்ட, ஒருமுறை தொடர்பு கொள்ளுதல்.
  • எப்பொழுதும் அவள் தயாரித்த உணவு நன்றாக இருந்ததென்று சொல்லுதல்.
  • வண்டியின், வீட்டின், கடையின் கதவினை அவளுக்காகத் திறந்து கொடுத்தல்.
  • நீங்கள் அவளைத் திருமணம் செய்ததற்கான நல்ல காரனம்களை நியாபகப் படுத்துதல்.
  • எப்பொழுதும் அவளை சிரிக்க வைக்க ஏதாவது குறும்பு செய்தல்.
  • முடியுமானபோது, கட்டிலில் குறும்புத்தனமாக, விளையாடுதல்.
  • செல்லமாக சண்டை பிடித்துக்கொல்லுதல்.
  • மற்றவர்கள் முன்னாள் மனைவிக்கும் கொஞ்சம் செள்ளமாய்ப் பயப்படுவதுபோல் காட்டிக்கொள்ளுதல்.

  • தாம்பத்தியத்தில்   அவளது விருப்பு வெறுப்புகளுக்கும் சந்தர்ப்பம் கொடுத்தல்.
  • எங்களது உடல் நலத்தைப் பேணி, எப்பொழுதும் சுத்தமாக அவளை அணுகுதல்.
  • முடியுமானபோது, அவள் களைப்பாக இருந்தால், அவளது தலை, கை, கால் போன்றவற்றை அமுக்கிவிடுதல்.
இதுமட்டுமல்ல, இன்னும் ஏராளமான சிறு சிறு விடயங்கள், எமது வாழ்க்கையில் எம்முடன் மிக்க பாசமாக இருக்கும் ஒரு மனைவியை உருவாக்க உறுதுணையாய் அமையும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இல்லற வாழ்வு வளம்பெற வாழ்த்துக்கள்.


எழுதியவர் பற்றி:
பெயர்: Jiff
இணையம்: http://www.spicytec.com


4 Responses to “Family Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி?”

mohamedali jinnah said...
May 15, 2011 at 7:10 PM

முடியுமானபோது, அவள் களைப்பாக இருந்தால், அவளது தலை, கை, கால் போன்றவற்றை அமுக்கிவிடுதல்....அடுத்து மகிழ்வுதான்


Anonymous said...
May 15, 2011 at 9:06 PM

தம்பதியினருக்கு பிரயோசனமான தகவல்கள்..)


எம் அப்துல் காதர் said...
May 16, 2011 at 9:34 AM

இவ்வளவு இருக்கா?? போச்சு போங்க...!!


pasumai herbals dindigul said...
July 6, 2015 at 12:59 PM

ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |