புலிகளின் கொலைக்களம் .....

இந்த பதிவின் நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிப்பதர்காகவோ இல்லை அவர்களிடம் காசுவாங்கி அவர்களுக்கு ஒத்து ஊதுவதர்காகவோ எழுதப்படவில்லை,இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புலிகள் செய்த அநீதிகளை மறைபதர்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு அடி கொடுக்கவே இந்தபதிவு.

முக்கியமாக இந்திய தமிழர்களுக்கு தனது நிஜ முகத்தினை மறைத்து வீரம் தீர அமைப்பு என தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு முதுகிற்கு பின்னால் தனது வீர தீர செயல்களை புரிந்த ஒரு தீவிர வாத அமைப்பை இலங்கை அரசின் செயல்களால் உத்தமர்களாக ??? தியாகிகளாக வர்ணிப்பதை பொறுத்துக்கு கொள்ள முடியாத ஒரு சாதாரண இலங்கை பிரஜையாக இந்த பதிவினை எழுதுகின்றேன்.மும்பை தாக்குதல் பற்றி தெரிந்ததும் தீவிரவாதிகள் மீது இந்தியர்களாகிய உங்களுக்கு எவ்வாறு கொலைவெறி கோவம் உண்டாகியது ? அதே போல் தான் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் புலிகள் மீது உண்டாகிய கோவம் இன்றுவரையில் மாறாத வடுவாக எல்லோர் நெஞ்சங்களிலும் உள்ளது .

இதற்கு என்ன காரணம்? என்று தானே கேட்கின்றீர்கள் மும்பையில் தீவிரவாதிகள் நுழைந்து ஈவுயரக்கம்ற முறையில் எவ்வாறு மக்களை கொன்று குவிதார்களோ அதைவிட பலநூறு மடங்கு கொடூரமான முறையில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் குழந்தைகள் உட்பட 147 பேரை முதுகிற்கு பின்னால் இருந்து சுற்று கொன்றது. இந்த விடயம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்,????

ஆம் 1990 ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் அழியா துக்கத்தினை ஏற்படுத்திய இலங்கையில் கிழக்கே அமைந்துள்ள காத்தான்குடி நகரத்தில் தான் இந்த கொடூரத்தினை வீர தீர அமைப்பாக தன்னை காட்டிகொண்ட மனித பசிகொண்ட அமைப்பு அரங்கேற்றியது .இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 1" 1990ல் அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்களும், 2 திகதி  மதவாச்சி  ,மட்டக்களப்பு மற்றும் மஜீது புரம்  ஆகிய ஊர்களில் 15 முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்தே காத்தான்குடிப் படுகொலை நடந்தது.
இரவு 8.20 மணியளவில் முஸ்லிம்களின் கட்டாய கடமைகளுள் ஒன்றான இரவு நேர இஷாதொழுகையினை (நான்கு பள்ளிகளில் மீர் ஜும்மா ,உசைனியா ,பவ்சீ ,மற்றும் மஸ்ஜித் உல் நூற் ) 300 இற்கு அதிகமான் மக்கள் மேற்கொண்டிருந்த சமயம் 30 பேர் கொண்ட ஆய்தம் தரித்த புலிகளின் காடையர்களின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஈவு இறக்க மற்ற துப்பாக்கி சூட்டின் மூலம் 25 பிஞ்சி குழந்தைகள் உட்பட 147 அப்பாவி மக்கள் படுகொலை செய்தனர் ,இதன் பின்னரே புலிகளை முஸ்லிம்கள் அடியோடு வெறுக்கலாயினர் .இப்படி பட்ட அமைப்பினையே நீங்கள் தியாகிகள் ,போராளிகள் என்ற பெயர்களில் அழைக்கின்றீர்கள் .

படுகொலை வீடியோ காட்சி .....இந்த படுகொலைகளை அரங்கேற்ற ஒரு வாரத்திற்கு முன்னதாக 60000 முஸ்லிம்கள் வசித்த காத்தான்குடி மக்கைளை தமது சொந்த இடங்களை விட்டு ஓடி விடுமாறும் மறுத்தல் உயிரை இழக்க நேரிடும் என்றும் தியாகிகளின் அமைப்பினால் எச்சரிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிட படவேண்டியதாகும்.

குறிப்பு :- நிச்சயமாக இந்த பதிவு தமிழருக்கு எதிரான பதிவல்ல புலிகளுக்கு எதிரான பதிவே ..........

மனித நேயம் பற்றி பேசும் புலி பினாமிகள் இதனை பற்றி என்ன சொல்ல போகின்றீர்கள்????

22 Responses to “புலிகளின் கொலைக்களம் .....”

பலே பிரபு said...
August 23, 2011 at 1:17 PM

Cant Say Anything. But Anyway Sri lanka Government Doesn't seen Weather it is Hindu or Muslim. They Think Only About Tamil Peoples Death.


சௌந்தர் said...
August 23, 2011 at 1:23 PM

இப்படி செய்ததாலேயே அவர்கள் அழிந்தனர்...


ஆமினா said...
August 23, 2011 at 1:32 PM

:-(


ஆமினா said...
August 23, 2011 at 1:36 PM

சாரி சகோ....

எனக்கு இந்த அரசியல் பத்தி சரியான புரிதல் இல்லாததுனால எதுவும் சொல்ல முடியல....

மதம் என்பதையும் மீறி கொலப்பட்ட உயிர்களை காணும் போது காரணகர்த்தாக்களை வன்மையாக கண்டனங்களை தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.

சொல்ல வந்த விசயங்களை படிக்கும் போதும் புகைபடங்களை காணும் போதும் நெஞ்சம் பதறுகிறது. எப்படியெல்லாம் துடித்திருப்பார்கள் என நினைக்கையில் இதயமும் துடிக்கிறது. அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் உறவினர்களின் முன் பிணமாக கட்டி கொடுக்கப்பட்ட போது அதனை கண்ட அவர்கள் எவ்வாறு கலங்கியிருப்பார்கள் என நினைக்கும் போது அழுகை பிறக்கிறது

கனத்த மனதுடன் நான்

தவறிழைத்தவர்கள் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.


Anonymous said...
August 23, 2011 at 2:38 PM

அப்புறம் முஸ்லீங்கள் தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், ஊர்காவல் படையில் இணைந்து தமிழர் மீது மேற்கொண்ட அக்கிரமங்கள், மட்டக்கிளப்பிலே தமிழ் சிறுவர்களை சிலரை சிதறு தேங்காய் என்று சொல்லி தரையில் தூக்கி அடித்த சம்பவங்கள்,ஜிகாத் அமைப்பின் அட்டூழியங்கள், யாழிலே போராளிகளை காட்டிகொடுத்தது, இவற்றை எல்லாம் சொல்ல வேண்டியது தானே. தமிழர் விடுதலை போராட்டத்துக்கு அன்று தொடக்கி எப்பவாவது ஆதரவாக இருந்ததுண்டா.

அவர்கள் தீவிரவாதிகளா இல்லை தியாகிகளா என்று முடிவு செய்ய தாங்கள் யார் ,தாங்கள் தான் தமிழர் இல்லையே, காலா காலம் மாறிவரும் சிங்கள பேரினவாதத்துக்கு வால் பிடித்தே காலத்தை ஓட்டுபவர்களாச்சே ஆகவே உங்களுக்கு அவர்கள் தியாகிகள் என்று நிருபிக்க வேண்டிய எந்த கடப்பாடும் இல்லை.

தாங்கள் சொல்லுற படுகொலைகளை எல்லாம் செய்த கருணாவை முஸ்லீம் அரசியல்வாதி தானே காப்பாற்றினார்.

தன் வினை தன்னை சுடும்.


Anonymous said...
August 23, 2011 at 2:41 PM

ஆடு நனையுதென்று எந்த ஓநாய்களும் கவலை பட வேண்டியதில்லை, புலிகள் தியாகிகளா தீவிரவாதிகளா என்று முடிவு செய்ய வேண்டியது "தமிழ் மக்கள்" மட்டும், ஒட்டுண்ணியாக வாழ்பவர்கள் இல்லை.


nidurali said...
August 23, 2011 at 4:51 PM

கொன்றவரும் தமிழன் கொல்லப்பட்டவரும் தமிழன். முஸ்லிம் என்றால் அரபிக்காரன் என்று சில தமிழர்களின் நினைவு. வாழும் நாடு தன் தாய்நாடு என்ற நினைவு வரவேண்டும். வேற்றுமை பார்க்கின் சுற்றமில்லை.


அந்நியன் 2 said...
August 24, 2011 at 3:57 AM

புலிகள் அழிக்கப்பட்டனர் என்பதை விட அவர்களாகவே அழிந்து விட்டனர் என்று கூட சொல்லலாம்.

நிகழ்வுகள் நிகழ்கின்றன காலங்கள் மறைகின்றன கறை படிந்தவை வரலாறு ஆகின்றது,இப்படித்தான் சுற்றுகிறது உலகம்.

இக்காட்சியின் தொகுப்பில் நானும் ஐந்து மாதங்களுக்கு முன்னே பதிவிட்டேன் பிறகு அப்பதிவை நீக்கிவிட்டேன்,காரணம் உருவம் இல்லா ஓவியத்திற்கு நாம் வர்ணம் எப்படி அடிப்பது என்று கேட்பது போல இருக்கு இப்பதிவு.

புலிகள் இஸ்லாமியினரையும் இணைத்து இப்போராட்டத்தில் கலந்திருந்தால் நிச்சயமாக தனி நாடு கிடைக்கப் பெற்றிருக்கும்.

தயவுசெய்து இப்பதிவினை நீக்கி எஞ்சிய தமிழர்களுக்காக குரல் கொடுங்கள்.


Anonymous said...
August 24, 2011 at 8:24 AM

enna sola vara


Anonymous said...
August 24, 2011 at 8:48 AM

பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை நியாயபடுத்தியவர்கள், இதையல்லாம் ஒத்துக்கொள்வார்களா!!!

(ராஜீவ்காந்தி கொலை வழக்கு)தூக்கு தண்டனை கைதிக்கு பரிந்து பேசும் கூட்டம்...

-அன்புடன் பல்லவன்


Anonymous said...
August 24, 2011 at 11:55 AM

kolakaran kolakaranthan.avanthan thamilan.


FARHAN said...
August 24, 2011 at 12:59 PM

என்கருத்தினை நான் இந்த பதிவில் சொன்னேன் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளீர்கள் ஆகையால் பின்னூடங்களுக்கு பதில் தர தேவை இல்லை என நினைகின்றேன்றேன் ஆனாலும் முதலில் கருத்து தெரிவித்த திரு அனானி அவர்களிடம் சில கேள்விகள் ....

//அப்புறம் முஸ்லீங்கள் தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், ஊர்காவல் படையில் இணைந்து தமிழர் மீது மேற்கொண்ட அக்கிரமங்கள், மட்டக்கிளப்பிலே தமிழ் சிறுவர்களை சிலரை சிதறு தேங்காய் என்று சொல்லி தரையில் தூக்கி அடித்த சம்பவங்கள்,ஜிகாத் அமைப்பின் அட்டூழியங்கள், யாழிலே போராளிகளை காட்டிகொடுத்தது, இவற்றை எல்லாம் சொல்ல வேண்டியது தானே. தமிழர் விடுதலை போராட்டத்துக்கு அன்று தொடக்கி எப்பவாவது ஆதரவாக இருந்ததுண்டா//

அப்போ இந்த படுகொலைகள் அனைத்தையும் நியாயம் என்று சொல்கின்றீர்கலா? இங்கு நான் சுட்டி கட்டியது ஒரே ஒரு படுகொலை பற்றிய விடயம் தான் இன்னும் நூற்று கணக்கான சம்பவங்கள் உண்டு அதை சொல்லவா?


//அவர்கள் தீவிரவாதிகளா இல்லை தியாகிகளா என்று முடிவு செய்ய தாங்கள் யார் ,தாங்கள் தான் தமிழர் இல்லையே, காலா காலம் மாறிவரும் சிங்கள பேரினவாதத்துக்கு வால் பிடித்தே காலத்தை ஓட்டுபவர்களாச்சே ஆகவே உங்களுக்கு அவர்கள் தியாகிகள் என்று நிருபிக்க வேண்டிய எந்த கடப்பாடும் இல்லை.//

அப்போ தமிழர்கள் தான் தமிழர்களை தியாகிகள் என்று சொல்ல வேண்டுமா?? மற்றவர்கள் சொல்ல வேண்டியதில்லையா ?? முதலில் தமிழர்கள் என்றல் யார் எண்டு சொல்ல முடியுமா?? நானும் தமிழன் தான் தமிழை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமியன் வித்யாசம் விளங்குகின்றதா ?

//தாங்கள் சொல்லுற படுகொலைகளை எல்லாம் செய்த கருணாவை முஸ்லீம் அரசியல்வாதி தானே காப்பாற்றினார்.
தன் வினை தன்னை சுடும்.//

நீங்கள் சொல்லும் கருணா 2004 ஆண்டு வரை புலிகள் இயக்கத்தில் ஓர் தளபதியாக தான் இருந்தார் இந்த சம்பவம் நடைபெற்றது 1990 ஆம் ஆண்டு.. 14 ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் தளபதியாக தான் இருந்தான் அப்புறம் எதற்கு தங்கள் தலைவர் இந்த குற்றத்திற்கு கருணாவிற்கு தண்டனை குடுக்க வில்லை ???


Anonymous said...
August 24, 2011 at 3:36 PM

அவர்கள் அந்த முஸ்லீம் மக்களுக்கு செய்ததை விட 100 மடங்கு அதிகமாகஅனுபவித்து விட்டார்கள்.

மேலும் அந்த காரியத்தை செய்ய தூண்டியவர்கள் இன்று உயிருடன் இல்லை.இனி அதைபற்றி பேசுவது சரியாக இருக்காது.

""அந்நியன் 2 said..."" சொல்வது போல் இந்த பதிவை நீக்கலாம்.

மறப்போம், மன்னிப்போம்...

-அன்புடன் பல்லவன்.


ரெவெரி said...
August 24, 2011 at 7:19 PM

இது என் முதல் விஜயம்...சுற்றிப்பார்த்து விட்டு வருகிறேன்....


அம்பலத்தார் said...
August 24, 2011 at 10:20 PM

பாரபட்சமின்றி இலங்கைத்தீவில் தமிழர், முஸ்லீம்கள், சிங்களவர் ஆகிய மூவின அப்பாவிப்பொதுமக்களும் அரசியல்வாதிகளால் ஒடுக்கப்படுகின்றார்கள், சுரண்டப்படுகிறார்கள்... ஆனால் ஒவ்வொரு இனமும் தான் படும் கஸ்டங்களிற்கான காரணம் மற்றைய இனங்கள்தான் என்ற கருத்து இவர்களிடம் விதைக்கப்பட்டுகிறது. இம்மக்களை இவ்வாறு பிரித்தாழ்வதன் மூலம் அரசியல்வாதிகள் லாபமடைகிறார்கள். இம்மக்கள் தாம் ஏமற்றப்படுவதை உணர்ந்து இதற்குக்காரணமான அரசியல்வாதிகளை இனங்கண்டு ஒதுக்கித்தள்ளுவதன்மூலமும் தமக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து தமக்குரிய சரியான அரசியல் மார்க்கத்தைத் தேடுவதன் மூலமாகவுமே இலங்கைத்தீவில் நிரந்தர அமைதியும் ஒற்றுமையும் எட்டப்படும்.


Anonymous said...
August 24, 2011 at 11:07 PM

////அப்போ இந்த படுகொலைகள் அனைத்தையும் நியாயம் என்று சொல்கின்றீர்கலா? இங்கு நான் சுட்டி கட்டியது ஒரே ஒரு படுகொலை பற்றிய விடயம் தான் இன்னும் நூற்று கணக்கான சம்பவங்கள் உண்டு அதை சொல்லவா?/// நியாயப்படுத்தவில்லை ,பொல்லு கொடுத்து அடிவாங்கிநீர்கள் என்று சொல்லவந்தேன்.


Anonymous said...
August 24, 2011 at 11:09 PM

///அப்போ இந்த படுகொலைகள் அனைத்தையும் நியாயம் என்று சொல்கின்றீர்கலா? இங்கு நான் சுட்டி கட்டியது ஒரே ஒரு படுகொலை பற்றிய விடயம் தான் இன்னும் நூற்று கணக்கான சம்பவங்கள் உண்டு அதை சொல்லவா?// அது தான் சொல்கிறேன் ,அவர்களை சுட்டி காட்ட முன் உங்கள் ஆக்கள் தமிழர்களுக்கு எதிராக செய்த கொலைகளை சுட்டிக்காட்டுங்கள் ,காட்டி கொடுப்புக்களை குறிப்பிடுங்கள் .அதன் பின் புலிகளின் கொலைகளை பற்றி பார்ப்போம்


Anonymous said...
August 24, 2011 at 11:13 PM

அப்போ தமிழர்கள் தான் தமிழர்களை தியாகிகள் என்று சொல்ல வேண்டுமா?? மற்றவர்கள் சொல்ல வேண்டியதில்லையா ?? // தேவையில்லை அவர்கள் போராடியது தமிழர்களுக்காக ஆகவே போற்ற வேண்டியது, தூற்ற வேண்டியது தமிழர்கள் மட்டும் தான், அவர்கள் தியாகியாகவோ துரோகியாகவோ இருக்க வேண்டியதும் தமிழர்களுக்கு மட்டும் தான். ஓட்டுன்னியளுக்கு அல்ல

இப்ப மட்டும் நீர் தமிழன் என்கிறீரே, எப்பவாவது யாருடனும் கதைக்கும் பொது 'நான் தமிழன்' என்று ஒரு முஸ்லீம் தன்னை அடையாளப்படுத்தியிருக்கான? இல்லையே. உங்களுக்கு கதைக்க மட்டும் தமிழ் மொழி வேண்டும், ஆனால் செய்வதெல்லாம் தமிழினத்துக்கு எதிர்வினை. எவன் பலமாக இருப்பானோ அவன் முதுகில் சவாரி செய்வபர்கள் தான் உங்கள் ஆட்கள்.


Anonymous said...
August 24, 2011 at 11:15 PM

///Anonymous said...
August 24, 2011 8:48 AM

பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை நியாயபடுத்தியவர்கள், இதையல்லாம் ஒத்துக்கொள்வார்களா!!!// அதற்க்கு முன்னம் அந்த பாரத பிரதமர் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகளுக்கு நியாயம் கூறட்டும், ஏனெனில் உங்கள் ஒசாமா பில்லேடன் செய்ததை விட தமிழர்களுக்கு எதிராக அதிகமாகவே ராஜீவ் செய்துள்ளான். அவன் ஒரு கொலைகாரன் தான்.


Anonymous said...
August 25, 2011 at 10:13 AM

THoppi piraddi Muslimkal Kaaddi Koduththu Kolla padda Tamil Makkludan Oppiddu paarkkum pothu ithu 1% kuda varathu..... Thurokam seythavarhalukku Kidaitha thandanaithan ithu... unkalukku varalaru theriyavillai enral, therinthavarakludam kelunkal.


FARHAN said...
August 25, 2011 at 1:43 PM

அப்பாவி மக்களை முதிகிற்கு பின்னல் இருந்து சுட்ட வீரர்களையும்
சிங்கள விவசாயிகளை நல்ல முறையில் கொன்றொளித்த தீரர்களை
போராட்டம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பஸ்களில் ரயில்களில் வெடுகுண்டு வைத்து தீர்த்த
மற்றும் ஒன்று அறிய பிக்குகள் போன்றவர்களை கொன்றொளித்த மகாவீரர்களை
பேரழிவு ஏற்படும் என்று தெரிந்தும் போர்சூனிய பகுதியில் போய் பெண்களின் முந்தனியில் ஒளிந்துகொண்ட சூரர்களை

இன்று முதல் தியாகிகள் என்று அன்போடு அலைகின்றோம் ....

திரு அனானியாரே இப்போது சந்தோசமா??


VANJOOR said...
December 30, 2011 at 3:34 PM

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********


.


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |