சுவையானதும் வித்தியாசமானதுமான பழங்கள்...
Do you like this story?
கோடை விடுமுறையில் என்னதான் குளிர் பிரதேசத்துக்கு குடும்பத்தோடு கிளம்பிப்போனாலும் போதாது, கொஞ்சமாவது வித்தியாசமானதும் சுவையானதுமான பழங்கள் சாப்பிட வேண்டும். உங்கள் ரசனைக்கும் புத்துணர்ச்சிக்கும்
உகந்த பத்து வகை பழங்கள் நாம் தருகிறோம் ருசித்துப்பாருங்கள். .........
உகந்த பத்து வகை பழங்கள் நாம் தருகிறோம் ருசித்துப்பாருங்கள். .........
01 . ரம்புட்டான்
மலேசியாவுக்கு உரித்தானது
என்றும் பசுமையான மரங்களில் கிடைக்கும் இந்த பழம் கண்ணைகவரும் சிவந்த நிறமுடையது, என்றாலும் உள்ளே உள்ள வெண்மையான சதைப்பகுதியையே சாப்பிட முடியும். இது தென்கிழக்காசியாவில் மிகவும் பிரபலமானது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இது கிடைக்கும்.
௦2. பலாப்பழம்
தென்னிந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன் மற்றும் இலங்கைக்கு உரித்தானது
உலகில் மரத்தில் காய்க்கும் மிகப்பெரிய காய்களில் இதுவும் ஒன்று. ஒரு பழம் நூற்றுக்கணக்கான பலாச்சுளைகளை கொண்டிருக்கும்.
03. கொடி தோடை.
தென் அமெரிக்கா, இந்திய, நிவ்சீலாந்து மற்றும் பிரேசில் நாடுகளுக்கு உரித்தானது..
மற்றைய பழங்களைப் போலல்லாமல் அதிகமான வித்துக்களை உள்ளடக்கிய ஒரு சுவையான பழம். பொதுவாக பழரசம் தயாரிக்க இது மிகவும் உகந்தது. இவை இரு வகைப் படுமேன்பதும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.
04. லிசீ
தென் சீனா, இந்தியா மற்றும் தாய்வான்....
பசுமையான மரங்களிலிருந்து பெறப்படும் சிவப்பு நிற தோலினால் மூடப் பட்ட ஒரு வெண்ணிற பழம் இது. விட்டமின் "சி" ஐ தனக்குள் அதிகமாக உள்ளடக்கிய ஒரு உன்னத பழம். இது லிசீ அல்லது லிட்சி என அழைக்கப் படும்.
05 நட்சத்த்திரப் பழம்/காமரம் பழம்
இலங்கை, இந்தியா மற்றும் இந்தோனேசியா.....
இது செவஊதா மலர்களைத் தரும் "கரம்போல" மரத்திலிருந்து பெறப் படும் பழமாகும். மேலும் இப் பழம், அன்னாசிப் பழம், ஆப்பிள் மற்றும் கிவி பழங்களின் சுவையை ஒன்றாகத் தனக்குள் உள்ளடக்கி இருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். விட்டமின் "சி" ஐ உள்ளடக்கியுள்ளதொடு, இது வைன் தயாரிப்பதற்கும் உதவுகிறதாம்.
06 மங்குஸ்தான்
சுண்ட தீவு மற்றும் மொலுக்காஸ்......
இன்னொரு பசுமை பொருந்திய மரத்திலிருந்து பெறப்படும் அருமையான பழமாகும். வெண்மையான சுளைகளைக் கொண்ட இப்பழம், சில நோய்களுக்கும் நிவாரனியாம் என சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
07 கும்கோட்
சீனா தேசத்தைச் சேர்ந்தது..
இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறாவிடினும், இது மது பானம் தயாரிக்க உபயோகிக்கப் படுவதோடு தேநீருடன் சேர்த்து அருந்தப்படுவதாகவும் கூறப் படுகிறது.
08 தூரியன்
ப்ருனெய், மலேசியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை...
கூறிய முட்களைக் கவசமாகக் கொண்ட இப்பழம், பழங்களின் அரசன் என அழைக்கப் படுகிறது. ஒரு வித்தியாசமான மிகுந்த வாசனையைக் கொண்டதனால், ஹோட்டல் மற்றும் பொது இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
09 டிராகன் பழம்/சாத்தான் பழம்
மெக்சிக்கோ, மத்திய மற்றும் தென் அமெரிக்கா....
ஒரு வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய இப்பழம், பழரசம் மற்றும் வைன் தயாரிக்க உபயோகிக்கப் படுவதோடு, இதன் பூவும் உணவாக எடுத்துக்கொள்ளப் படுகிறது/தேநீருடன் கலந்தும் அருந்தப் படுகிறது.
10 ஆபிரிக்கன் வெள்ளரிக்காய்/வெள்ளைக்காரி
ஆபிரிக்காவை மற்றும் சாரும்...
வெளித் ஹ்டோற்றத்தில் மஞ்சள் நிற்றத்தையும் முட்களையும் கொண்டதாக இருந்தாலும் உட் தோற்றத்தில் பச்சை நிறத்தை உடுத்தியுள்ள, அருமையான பழம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 Responses to “சுவையானதும் வித்தியாசமானதுமான பழங்கள்...”
July 28, 2010 at 7:55 AM
enakku afirikkan wellaikkari wendum
July 28, 2010 at 1:41 PM
hehe.. wellaikkaaran allow panninaa no problem...
Post a Comment