உலகிலேயே குட்டையான இளம் பெண் இந்தியாவிலிருந்து..


இந்தியாவைச் சேர்ந்த இந்த இளம் பெண் ஒறு அடி, 11 அங்குலம் (58cm) மற்றுமே உயரமுடயவர். 14 வயதுடைய இந்த Jyoti Amge என்கிறவர் இரண்டு வயது குழந்தையை விடவும் சிரியவராவர். மேலும் அவரது இடை 11lb/ 5kg ஆகக் காணப் படுகிறது.


அவருக்கு achondroplasia என்ற பிரச்சினை இருப்பதால் இதற்கு மேல் வளர வாய்ப்பில்லை எனக் கருதப் படுகிறது.

அவரது உயரத்துக்கு ஏற்ப உடை, ஆபரணங்கள், உணவு உட்பட அனைத்து விடயங்களும் வேறாக செய்யப் படுகிறது. அவருக்கென்றே அவர் படிக்கும் நாக்பூரில் அமைந்துள்ள பள்ளியில் தனியான சிறிய தளபாடங்கள் அவரை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தி அனைவரையும் கவர்கிறது.

மற்ற சக நண்பிகளைப் போன்று இவருக்கும் பொதுவான விருப்பு வெறுப்புகள் காணப் படுவதோடு, திரைப் படங்கள் பார்த்தல் போன்ற பொதுவான பொழுது போக்குகளில் இவரும் ஈடு படுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில் "நான் குள்ளமாய் இருப்பதில் எனக்கு எந்த கவலையோ பயமோ இல்லை. அத்தோடு, மற்றவர்களின் கவனம் என் மீது விழுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது, நானும் மற்றவர்களைப் போலும்தான், உடை அணிவது, கனவுகள், உணவு உண்பது எல்லாமே பொதுவானது. நான் எந்த வேறு பாட்டையும் உணர்வே இல்லை." 


அவரது பெற்றோர் அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். அவரது தாய் குறிப்பிடுகையில் "அவர் பிறக்கும் போது சாதாரணமாகத்தான் இருந்தார். ஐந்து வயதை அடைந்த பின்பே அவருக்கு உள்ள குறைபாடு தெரிய வந்தது. இருந்தாலும் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். அவருக்கு போல்லிவூத் நடிகையாக வரவேண்டுமென்றும் வெளி நாடுகளுக்குச் செல்லவேண்டுமேன்றும் ஆசைகள் உள்ளன..1 Responses to “உலகிலேயே குட்டையான இளம் பெண் இந்தியாவிலிருந்து..”

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
August 20, 2011 at 11:44 AM

Super sir vijay tv la tamilla kooda documentary vanthurunthuchu


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |