இரண்டு டாலரில் உலகம் சுற்றும் வாலிபர் ....


பலநாடுகளுக்கு செல்லவேண்டும் பல நாடுகளை சுற்றி பார்கவேண்டும் என்று  நம்மில் அதிகமானோருக்கு ஆசை உண்டு ஆனால் இப்படி செல்வதற்கு அதிகம் பணம் செலவிடவேண்டி இருப்பதால் நமது ஆசைகளை புதைத்து விட்டு வாழ்கின்றோம் ஆனால் ஜப்பானை சேர்ந்த கீச்சி லவசாகி(Keiichi Iwasaki,) என்னும் இளைஞர் நூற்றி அறுவது ஜப்பானிய யங்களை மட்டும் அதாவது கையில் இரண்டே இரண்டு டொலர்களை வைத்து தனது உகம் சுற்றும் பயணத்தை ஆரம்பித்து 37 நாடுகளை தனது சைக்கிள் மூலமே வலம்வந்துவிட்டார்.
இதனை பற்றி லவசாகி குறிப்பிடுகையில் "உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு ஆனால் எனது 28 வயது வரை எனக்கு அந்த சந்தர்பம் கிடைக்கவில்லை அதுவரை நான் எனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்தேன் ஆனாலும் அந்தவேளை எனக்கு பிடிக்க வில்லை அதனால் எனது நீண்ட நாள் கனவான  உலகம் சுற்றும் பயணத்தை 2001 ஏப்ரல் மாதம் ஆரம்பித்து 37 நாடுகளை இந்த ஒன்பது வருடங்களில் கடந்துவிட்டேன். விமான பயணத்தில் எனக்கு நாட்டம் இருக்கவில்லை உலகநாடுகளின் காற்றினை நான் சுவாசிக்க  வேண்டும் அந்த நாடுகளின் சூழலை எனதுமேனி உணரவேண்டும் என்னும் காரணத்தினால் இந்த பயணத்தை என் சைக்கிள் மூலமே செல்லவேண்டும் என முடிவுசெய்தேன் .இந்த பயணத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையிடம் சிக்கிக்கொண்டது ,திபெத்தில் வெறிபிடித்த நாயிடம் கடிவாங்கியது மற்றும் கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்ட அனுபவங்கள் போன்றன மறக்க முடியாது தெரிவித்துள்ளார் " தற்போது சுவிற்சலாந்தில் இருக்கும் லவசாகி அடுத்து ஐரோப்பா அமெரிக்க ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுக்ள்ளார்.
லவசக்கி இதுவரை வலம் வந்த நாடுகள் 

South Korea, China, Vietnam, Cambodia, Thailand, Malaysia, Singapore, Laos, Nepal, India, Bangladesh, Pakistan, Iran, Azerbaijan, Georgia, Turkey, Greece, Bulgaria, Macedonia, Albania, Montenegro, Croatia, Bosnia & Herzegovina, Serbia, Hungary, Slovakia, Czech, Austria, Germany, Holland, Belgium, France, England, Spain, Portugal, Andorra, Switzerland.

லவசாகி தனது உலகம் சுற்றும் பயணத்தில் இதுவரை 45,000 km வரை பயணம் மேற்கொண்டுள்ளார் ,இது தவிர இந்தியாவின் கங்கை நதியில் 1,300 km படகின் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார் .

14 Responses to “இரண்டு டாலரில் உலகம் சுற்றும் வாலிபர் ....”

தோழி பிரஷா said...
January 8, 2011 at 9:44 AM

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்


THOPPITHOPPI said...
January 8, 2011 at 11:42 AM

சைக்கிளில் உலகை வலம்வந்தார் என்றால் இது உண்மையில் சாதனைத்தான்


Lakshmi said...
January 8, 2011 at 8:25 PM

இதுபெரிய சாதனைதான்


Meena said...
January 8, 2011 at 9:02 PM

நம்பவே முடியவில்லை


FARHAN said...
January 9, 2011 at 12:06 AM

தோழி பிரஷா
விருதினை பெற்றுக்கொண்டேன் நன்றி சகோ

THOPPITHOPPI
சைக்கிள் மூலம் உலகவலம் வருவது சாதாரண விடயமல்ல இவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்


FARHAN said...
January 9, 2011 at 12:07 AM

லக்ஷ்மி அம்மா மற்றும் மீனா சகோ
வருகைக்கு நன்றிகள்


ம.தி.சுதா said...
January 9, 2011 at 4:04 AM

2 டொலரிலா.. ஹ..ஹ...ஹ என்னால சைக்கிளே சுற்ற முடியாது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..


ஆமினா said...
January 9, 2011 at 7:25 AM

நல்ல தகவல்

பக்கத்து தெருக்கு போறதுக்கே சிரமமா இருக்கு.....

ம்

பொறுமை சாலி தான்


FARHAN said...
January 9, 2011 at 8:35 AM

ம.தி.சுதா
நான் பின்தொடரும் முக்கிய பதிவர்களில் நீங்களும் ஒருவர் உங்களின் வருகை சந்தோசமாக உள்ளது நன்றி வருகைக்கு


FARHAN said...
January 9, 2011 at 8:36 AM

ஆமினா
உண்மைதான் பொறுமை தான் நமக்கு பெருமை தேடி தரும் என்பதற்கு சரியான உதாரணம் தான் இவர்


ரஹீம் கஸாலி said...
January 9, 2011 at 5:57 PM

உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இப்படிப்பட்ட அரிய செய்திகள் கிடைக்கிறதோ....


FARHAN said...
January 9, 2011 at 6:34 PM

ரஹீம் கஸாலி

கூகிள் மாமா இருக்க பயமேன்


ராஜவம்சம் said...
January 9, 2011 at 8:56 PM

சாதனையாளர்கள் பட்டியலில் இன்னொறு சாதனையாளன்.


பதிவுலகில் பாபு said...
January 10, 2011 at 9:17 AM

வித்தியாசமான விசயம்தான்..

இவர் எப்படி சாப்பிடுவார்.. செலவுக்கெல்லாம் என்ன பண்றார்.. :-)


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |