திசை மாற்றிய ஆசிரியரும் திசைகாட்டிய ஆசிரியரும் ...


ஒவ்வொருவருக்கும் தமது பள்ளி பருவம் என்பது வாழ்கையில் மறக்க முடியாத ஒன்றாகும் அப்படி என்னுடைய பள்ளி பருவத்தில் என்னை திசைமாற்றி பயணிக்க வைத்த ஆசிரியர் ஒருவரையும் எனக்கு திசைகாட்டி என் வாழ்கையில் விளக்கேற்றி வைத்த ஆசிரியரை பற்றியும் பதிவே இது.


கணக்கு பாடம் என்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு செம அலர்ஜி கணக்கு பாட ஆசிரியர் வரும் போதே நம்ம கிளாஸ்ல நெறைய பேருக்கு தூக்கமே வந்துவிடும் ஆனால் என்ன மாயமோ மந்திரோமோ எனக்கு கணக்கு பாடம் மட்டுமே பாடசாலை காலத்தில் விருப்ப படமாகவும் கணக்குபாட ஆசிரியரே எனக்கு விருப்பமான குருவாகவும்  இருந்துள்ளார் இதற்கு அவரின் அணுகுமுறையே காரணம் .

சாதாரண தரம் வரை படிப்பில் தேறுவேனா என்றிருந்த எனக்கு நம்பிக்கை தந்து உற்சாகமூட்டி எனக்கும் படிக்கவரும் என நிரூபித்து சிறந்த பெறுபேறுகளை எடுக்க வைத்து இப்ப நான் ஒரு கணக்காளராக பணிபுரிய காரணம் என்னுடைய கணித ஆசான் தான் அவரின் பெயரை குறிபிட்டே ஆக வேண்டும் திரு. சிவகுமார் ஆசிரியரே அது இவருக்கு நான் என்றென்றுமே கடமை பட்டுள்ளேன்.காரணம் என்னவென்றால் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனின் வாழ்க்கையை எவ்வாறு நல்வழியில் மாற்றமுடியும் என்று உதரணத்திற்கு உரியவர் இவரே.

ஆரம்பத்தில் படிப்பில் மீது எனக்கு ஆர்வம்  இல்லாமல் போனதற்கும் ஒரு ஆசிரியரே காரணம் அவரின் பெயரை குறிப்பிட முடியாது அவரே எனக்கு "கருப்பன்" என பட்டபெயர் வைத்து அழைத்தார் அது எனக்கு பிடித்து போக அதையே எனது புனை பெயராக வைத்துக்கொண்டேன் ("இது தான் கருப்பன் பிறந்த கதை" ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு ) இவரால் எப்படி படிப்பில் மீது ஆர்வம் இல்லாமல் போனதுன்னு கேக்குறீங்களா அது வொண்ணும் இல்லைங்க அப்பிடி என்ன தப்புதான் நான் செய்தானோ என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது கிட்டத்தட்ட 5 வருடங்கள் இவரே தொடர்ந்து எங்களுக்கு வகுப்பாசிரியராக வந்தார் எப்போதும் என்மீது கோவ பார்வையே இவரிடம் இருக்கும் இந்த முறை எப்பிடியாவது உன்னை பைல் (fail) பன்னுவன்னுதான்  அடிக்கடி சொல்லுவாரு அதனால் எப்படியும் பைல்(fail)  பன்னதானே போறாருன்னு நம்மளும் படிக்கிறத விட்டுட்டோம் படிக்கிரதுல ஆர்வமும் இல்லாமல் போனது இப்படிதான் என்னை லாஸ்ட் பெஞ்ச ஸ்டூடன்டாக திசை மாற்றி விட்டார் ..... 


இந்த நிலைமையில் தான் நான் நேசிக்கும் குரு எனக்கு கிடைத்தார் உன்னாளயும் முடியும் கணக்கு பாடம் என்பது மனப்பாடம் பண்ணும் பாடம் அல்ல உன் அறிவினை வளர்க்கும் பாடம் என சொல்லி என்மூது அதிக அக்கறை எடுத்து சிறந்த பெறுபேறு எடுக்க வைத்து சாதித்தும் காட்டினது மற்றுமல்லாமல் இவர் மட்டும் என் வாழ்வில் வர வில்லை என்றால் என்வாழ்க்கை திசை மாறி  வேறு எங்கோ  சென்றிருக்கும் என் வாழ்கையில் ஒளியேற்றி திசைகாட்டிய ஆசிரியர் இவரே .

"ஒரு கல்லாக இருந்த என்னை தூக்கி எறிந்தார்  ஒரு ஆசிரியர்
அந்த கல்லை எடுத்து சிற்பமாக வடித்தார்  இன்னொரு ஆசிரியர்"

ஆசிரியர்களே தனது சொந்த கோபங்களை மாணவர் மீது காட்டாதீர்கள் இறைவனின் அருளால் எனக்கு சிவகுமார் என்ற அற்புத குரு கிடைத்தார் எல்லோருக்கும் இதே மாதிரி கிடைக்கும் என்று சொல்ல முடியாது ."நாளைய உலகம் உங்கள் கையில் காரணம் நாளைய தலைவர்கள் உங்கள் வகுப்பறையில்" நாட்டின் எதிர்கால வளங்களை வீணாக்காதீர்கள்  மாணவர்களை சிறந்த கல்விமான்களாக நாட்டிற்கு தேவையான வளமாக மாற்றுவது உங்கள் கையிலேயே உள்ளது .

முதல் முதலில் சொந்த அனுபவத்தை பதிவிட்டுள்ளேன் ....இம்புட்டு நேரம் சீரியசா பதிவ வாசித்த அன்பு நெஞ்சங்களுக்கு சிந்திக்க அபூர்வ தகவலொன்று  




ஆங்கில அறிசுவடிகளில் முதல் நான்கு எழுத்துக்களான A,B,C,D

இந்த நான்கு எழுத்துக்களும் ஆங்கிலத்தில்1 முதல் 99 வரை உள்ள எண்களை எழுத பயன் படாது .
நூறில் அதாவது hundred என்று எழுதும் போது "D"முதல்முறையில் பயன் படுத்த படும்

அதே போல் முதல் மூன்று எழுத்துக்களும் 1 முதல் 999 வரை உள்ள எண்களை எழுத பயன் படாது.
ஆயிரத்தில் அதாவது Thousand என்று எழுதும் போது "A" முதல் முறையாக பயன்படுத்தப்படும்

அதேபோல் B மற்றும் C எழுத்துக்கள் 1 முதல் 999,999,999 வரை உள்ள எண்களை எழுத பயன் படாது.
billion என்று உபயோகிக்கும் போதே "B" முதல் முறை பயன் படுத்தபடும்

"C" எந்த ஒரு இலக்கம் எழுதவும் ஆங்கிலத்தில் பயன் படுத்துவதில்லை

(Crore என்று சிலர் பயன் படுத்துவதற்கு கம்பனி பொறுப்பில்லை )

17 Responses to “திசை மாற்றிய ஆசிரியரும் திசைகாட்டிய ஆசிரியரும் ...”

THOPPITHOPPI said...
January 12, 2011 at 8:50 AM

உங்களை போன்றே எனக்கும் இந்த அனுபவம் பள்ளியில் நடந்துள்ளது
நன்றி நண்பரே பழைய நினைவுகள்


Ramesh said...
January 12, 2011 at 8:55 AM

நல்ல பதிவு நண்பா.. உண்மையில் நிறைய ஆசிரியர்களுக்கு அடுத்த தலைமுறை மீதான பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்பதே புரிவதில்லை... எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.. ஏன் ஏறக்குறைய எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும்..


தமிழ்போராளி said...
January 12, 2011 at 8:57 AM

அருமை அருமை தோழரே...தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம்..


சக்தி கல்வி மையம் said...
January 12, 2011 at 9:20 AM

என்ன ஆனாலும் ஆசிரியர்கள் தெய்வங்களே...
ஒ ரு சிலரைத் தவிர...


குறையொன்றுமில்லை. said...
January 12, 2011 at 11:39 AM

எவ்வளவு வயசானாலும் பள்ளிப்பருவ நினைவுகளும் ஆசிரியர்பற்றிய நினைவுகளும் இப்பவும் பசுமை நிறைந்த நினைவுகளாகவே இருக்கின்றன.


FARHAN said...
January 12, 2011 at 12:48 PM

THOPPITHOPPI and பிரியமுடன் ரமேஷ்

ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு அனுபவம்


FARHAN said...
January 12, 2011 at 12:49 PM

விடுத‌லைவீரா said...

//அருமை அருமை தோழரே...தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம்//


என்னது இலக்கிய பயணமா இது கொஞ்சம் ஓவர் நண்பா


FARHAN said...
January 12, 2011 at 12:50 PM

sakthistudycentre.blogspot.com said...

என்ன ஆனாலும் ஆசிரியர்கள் தெய்வங்களே...
ஒரு சிலரைத் தவிர...


அந்த ஒருசிலரின் அணுகுமுறையால் எத்தனை எதிர்கால வளங்கள் வீணடிக்கப்படும்?


FARHAN said...
January 12, 2011 at 12:52 PM

Lakshmi said...

//எவ்வளவு வயசானாலும் பள்ளிப்பருவ நினைவுகளும் ஆசிரியர்பற்றிய நினைவுகளும் இப்பவும் பசுமை நிறைந்த நினைவுகளாகவே இருக்கின்றன.//


உண்மைதான் வாழ்வில் எந்த நிலையிலும் மறக்க முடியாத பருவம் பள்ளி பருவம்


Karthic said...
January 12, 2011 at 1:27 PM

பசுமை நிறைந்த மறக்க முடியாத பருவம் !


irimzan said...
January 12, 2011 at 4:41 PM

farhan u great buddy, i proud to be a ur friend.


NKS.ஹாஜா மைதீன் said...
January 12, 2011 at 4:55 PM

பள்ளி அனுபவத்தை மறக்க முடியுமா?....


Unknown said...
January 12, 2011 at 7:00 PM

ம்ம்ம்.. சேம் பிளட்..


FARHAN said...
January 13, 2011 at 6:50 PM

Karthic said...

//பசுமை நிறைந்த மறக்க முடியாத பருவம் !//

உண்மையான கருத்து


FARHAN said...
January 13, 2011 at 6:51 PM

iremzan said...
farhan u great buddy, i proud to be a ur friend.


நண்பேண்டா....!


FARHAN said...
January 13, 2011 at 6:52 PM

NKS.ஹாஜா மைதீன் said...
//பள்ளி அனுபவத்தை மறக்க முடியுமா?....


மறக்க தான் நினைக்க முடியுமா?


FARHAN said...
January 13, 2011 at 6:53 PM

பதிவுலகில் பாபு said...

ம்ம்ம்.. சேம் பிளட்..


BUT DIFFERENT MEALS


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |