விருந்தாளிகள்.....(சிறுகதை) தொடர்ச்சி


“எங்க ரவி? திடீரென்று ஒருவர் கேட்டார். “இப்பதானே இங்க இருந்தான். அதுக்குள்ள எங்க போனான்? “நீங்க இருங்கோ  ஐ வில் செக் என்ற ரகு, படுக்கை அறையில் சென்று பார்த்தான். அந்தப் பையன் எல்லா பொருட்களையும் போட்டு உடைத்துக் கொண்டே இருந்தான். “ரவி.. என்ன பண்றீங்க? நல்ல புள்ள தானே! இதெல்லாம் உடைக்க கூடாது என்ற படியே அவனைத் தூக்கிக்கொண்டு திரும்பினான். என்ன கொடுமை! கமலா முன்னாள் வந்து நின்றாள். “இவங்க எல்லாம் இங்க தின்னுட்டு, உள்ளதெல்லாம் ஓடச்சிட்டு போக வந்திருக்காங்க . பிள்ளை வளர்த்திருக்காங்க  பாரு ரகு ஒன்றுமே  சொல்லவில்லை. மெதுவாக விருந்தாளிகள் இருக்கும் பகுதிக்கு நகர முயன்றான். “நில்லுங்க.. ரொம்ப சாமான் எல்லாம் வாங்கணும். என்னால கடைக்குப் போக முடியாது. கடனுக்கு வாங்குறத நெனச்சிப் பாக்கக்கூட முடியாது. இத்தன பேரு வருவதென்றால் , கைல ஏதாச்சும் சாமான் வாங்கிட்டு  வர  நாகரீகம்  கூட அவங்கல்ட இல்லையா? என்ன பண்ண நான்? என்று சொன்னாள். குழந்தையை அவனின் அம்மாவிடம் கொடுத்த ரகு, வந்திருந்த ஒரு நண்பரிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்று எப்படியோ பேசி, தேவையான பொருட்களை வாங்கி வந்தான்.

வாங்கிவந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சமையலறைப் பக்கம் சென்றான். “வாங்க.. அந்த குட்டி பிசாசு ரவி செஞ்சிருக்குற வேலையப் பாருங்க..டாய்லெட்டுக்கு  கூட போகப் பழக்கி இல்லை  இங்க கிட்சென்ல அசிங்கம் பண்ணிட்டான். நாத்தம் தாங்கள்ள. என்னத்த திண்டு தொலச்சிச்சோ! என்னால இதுக்கு மேல பொறுக்க முடியாது. அவசரமா அவங்கள சாப்புட்டதும் அனுப்பி வெச்சிடுங்க என்று கோபத்துடன் சொன்னாள் கமலா. “அவன் சின்னப் பிள்ளை அவனுக்கு என்ன தெரியும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! ப்ளீஸ் என்று கோபத்தை வெளிக்காட்டாமல் கெஞ்சினான். “என்னவாச்சிம் செஞ்சி தொலைங்க என்று கூறிவிட்டு வந்தவர்களுக்கு சமையல் வேலைகளை ஆரம்பித்தாள்.

விருந்தாளிகளுடன் சிரித்துப் பேசிக் கதைத்துக் கொண்டிருந்த ரகுவின் உள்ளுக்குள்ளே, எப்படி கமலாவை சமாளிப்பது என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. காரியாலய நினைவுகள், பழைய கதைகள், மேலதிகாரிகளின் கோணல்கள் எல்லாம் அந்தத் திரைப்படத்திற்கு  மெருகூட்டியது. சிலமணி நேரங்களுக்குப் பிறகு, “ரகு.. கொஞ்சம் வாங்களே! ரகுவிற்கு ஏற்கெனவே தெரியும். சமையல் தயார். எல்லோருக்கும் சமையல் பரிமாறப்பட்டது. சந்தோஷமாக அனைவரும் உண்டார்கள். மதிய உணவு முடிந்து சிறிது நேரத்தில் அனைவரும் திரும்பிச் செல்ல தயாரானார்கள். விடை பெற்று அனைவரும் சென்று விட்டனர். அனைவரையும் வீதிவரை சென்று வழியனுப்பிய ரகு, வீட்டுக்குள் மெதுவாக வந்தான். வீடு வெருட்சோடி கிடந்தது கமலாவின் பார்வையில் வீடு, உருகுளைந்திருன்தது  கமலாவின் கோபமும் முனகலும்  நிற்பதாய் இல்லை. ரகுவும் மௌனம் சாதித்தான். “சப்பா.. என்ன ஆளுங்க! புள்ளைங்களா  இல்லை  பிசாசுன்களா! எல்லா சாமானையும் இழுத்துப் போட்டிருக்குதுங்க.. டீவியிண்ட  ரிமோட கூட ஒடச்சி வெச்சி அவளது முனகல் தொடர்ந்தது.

“ரகு..ரகு.. வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. முனங்களை  நிறுத்திய கமலா, சென்று கதவைத் திறந்தாள். மீண்டும் அதே விருந்தாளிகள், “இல்ல.. ஏன்டா செல்போன மறந்து வெச்சிட்டு போயிட்டேன் என்றார் அவர். அவரை உள்ளே கூட அழைக்காமல் செல்போன் ஐ கொண்டு வந்து கொடுத்தாள் கமலா. “சாரி! சொல்ல மறந்துட்டேன். டைய்னிங் டேபல் மேல ஒரு கவர் வெச்சேன். கைல குடுக்க நெனச்சேன் மறந்திருச்சி . அத எங்க இஸ்டாப் சார்பா ஒரு சின்ன பரிசு. வாரேன் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். கமலா சென்று அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்! “ரகு.... அவங்க இதுல இருபதாயிரம் காசு வெச்சுட்டு போயிருக்குறாங்க என்று சந்தோஷத்துடன் கூவத் தொடங்கினாள். “பாவம் அவங்க எவ்வளவு நல்லவங்க, நாகரீகம்  தெரிஞ்சவங்க. நான்தான் அவங்கள புரிஞ்சிக்காம தப்பா பேசிட்டேன் என்று தனது தவரை உணர்ந்தாள்.

விருந்தாளிகளை உபசரிப்பது மிகவும் சிறந்ததொரு பண்பு. அதை புன்னகை பூத்த முகத்துடன் சந்தோஷமாக, உளத்திருப்தியுடன் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்க எங்களிடம் இருப்பவை குறையாது. மாறாகக் கூடும்.

நன்றி...

3 Responses to “விருந்தாளிகள்.....(சிறுகதை) தொடர்ச்சி”

ரஹீம் கஸ்ஸாலி said...
April 30, 2011 at 12:43 PM

அடிக்கடி காணமல் போய் விடுகிறீர்களே?


அன்புடன் மலிக்கா said...
April 30, 2011 at 3:05 PM

விருந்தாளிகளை உபசரிப்பது மிகவும் சிறந்ததொரு பண்பு. அதை புன்னகை பூத்த முகத்துடன் சந்தோஷமாக, உளத்திருப்தியுடன் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்க எங்களிடம் இருப்பவை குறையாது. //

மிக நல்ல கருத்து. கொடுப்பாருக்கு செல்வம் குறையாது.. நல்ல கருத்துள்ள சிறுகதை..


சிவரதி said...
April 30, 2011 at 6:34 PM

நல்ல கருத்துள்ள சிறுகதை..


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |