Osama Dead ஒசாமா இறப்பில் புது குழப்பம் ...

அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒசாமா பின் லேடன் ஞாயிற்று கிழமை கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக தெரிவித்தது ஆனால்   அது சமபந்தப்பட்ட எந்த ஒரு புகைபடதினயோ அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு வீடியோ ஆதாரதினையும் இதுவரையில் அமெரிக்க அரசு வெளியிடவில்லை  பாகிஸ்தானில் இருந்து இணையதளங்களுக்கு பரப்பிவிடபட்ட சிதைக்கப்பட்ட நிலையில் இறக்கப்பட்ட ஒசாமாவின் படம் என வெளியிடப்பட்ட புகைப்படமும் போலி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலதிகமாக இனைய தளங்களில் ஒபாமா ஒசாமாவின் இறப்பை உத்தியோகபூர்வமாக  அறிவித்து கோவத்துடன் செல்லும் காட்சிகள் என ஒபாமாவின் சில காட்சிகள்  இனைய உலா வந்துகொண்டிருன்கின்றன இதற்கும் ஒசாமாவின் இறப்பிற்கும் எதவது சம்பந்தம் இருக்குமா?



10 Responses to “Osama Dead ஒசாமா இறப்பில் புது குழப்பம் ...”

Unknown said...
May 2, 2011 at 7:11 PM

நீங்களும் குழம்பிட்டீங்களா பாஸ்??


Unknown said...
May 2, 2011 at 7:12 PM

திரட்டிகள்??


Anonymous said...
May 2, 2011 at 7:50 PM

எனக்கு இதில் சிறு சந்தேகம் உள்ளது,ஒரே மாதிரி புகைப்படத்தை மட்டும் தான் வெளியிட்டார்கள் வீடியோ ஆதாரம் வெளியிடவில்லை???


mohamedali jinnah said...
May 2, 2011 at 8:11 PM

அதிசயம் ! ஒன்றும் விளங்கவில்லை .இது மட்டும் உண்மை .நீங்கள் சிறந்த நிபுணர் புதிதாக கண்டு செய்தி கொடுப்பதில் .அமெரிக்க அரசு உங்களை CBI யில் சேர்க்க தேடுகிறதாக கேள்வி !


FARHAN said...
May 3, 2011 at 8:32 AM

சதாமை பிடித்தது முதல் தூக்கில் போடும்வரை வெளியிட்ட வீடியோ ஆதாரம் ஒசாமாவை கொன்று கடலில் எறிந்ததாக சொல்லும் இராணுவத்திற்கு வீடியோ ஆதாரத்தினை வெளியிடுவதில் இன்னும் எதற்கு தயக்கம் ?


NKS.ஹாஜா மைதீன் said...
May 3, 2011 at 10:46 AM

இறந்துபோன ஒசாமாவின் புகைப்படம் இதுவரை வெளியிடப்படவில்லை என்று ஒரு கருது நிலவுகிறதே?


Open Window said...
May 3, 2011 at 3:53 PM

உலகத்தை நம்பினால் உண்மையை ஏற்றுக்கொள்ளலாம். உண்மையில் இறந்தது ஒசாமா என்பதில் என்ன சந்தேகம்? அப்படி பொய் சொல்வதென்றால் அமெரிக்கா ஒன்பது வருடம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்கா ஒன்னும் இந்தியாவோ பாகிஸ்தானோ இல்லை.


FARHAN said...
May 3, 2011 at 4:16 PM

@daniel surender

உலகத்தினை எந்த விதத்தில் நம்பிக்கை வைப்பது அமெரிக்க உண்மையை தவிர வேறெதனையும் சொல்ல்வதில்லையா ஒசாமா கொல்லப்பட்டதாக அறிவிக்கின்றமை இது முதல் தடவையும் அல்ல அதுமட்டுமில்லாமல் தனது வல்லரசு சக்தியை நிரூபிப்பதற்கு அமெரிக்க என்னவேன்ருமேன்றாலும் சொல்லும் உங்களுக்கு உதாரணம் வேண்டுமென்றால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பியதாக சொன்னதையும் ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக சொல்லி போரை ஆரம்பித்ததனையும் நினைவில் கொள்க


Open Window said...
May 3, 2011 at 7:01 PM

எனக்கு நூறு வீதம் நம்பிக்கை உண்டு ஒசாமா செத்ததில், அதற்காக நான் அமெரிக்காவிற்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. தமிழர் எமக்கு ஒரு இயல்பு உண்டு, அவர்களிற்கு பிடிக்காதவர் அல்லது எதிரியானவர் செய்வதெல்லாம் தவறு, சொல்வதெல்லாம் பொய். அப்படி நினைப்பதால் தமிழன் இழந்தது கொஞ்சம் அல்ல. ஈழம் ஒரு படிப்பினை.!!!
ஈராக், அணு ஆயுதம் என்னும் காரணத்தில் எண்ணை வளங்களை கைப்பற்ற நுழைந்தது உண்மை. யார் காரணம்? சடாம்.!!! நீங்கள் சடம் முதல் கடாபி வரை விக்கிபீடியாவில் கற்று தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது லிப்யா, யார் காரணம் அமெரிக்காவா காரணம்? எத்தனை அரபு நாடுகளில் மக்கள் கொதித்து கொண்டு இருக்கிறார்கள், யார் காரணம்? அமெரிக்காவா? அந்தந்த நாட்டின் தலைவர்களின் தவறு. வீட்டிற்கு பெரு அப்பா, நாட்டிற்கு ஒரு மந்திரி, உலகிற்கு ஒரு தலைவன் கண்டிப்பாக வேண்டும், அது இல்லை என்றால் மூன்றாம் உலகப் போர் எப்போவோ முடிந்திருக்கும்.


jiff0777 said...
May 3, 2011 at 10:56 PM

எண்ணக் கொடுமைடா இது!
** சதாம், கத்தாபீ போன்ற தலைவர்கள் கெட்டவர்கள் என்று அந்த நாட்டு மக்கள் முடிவு செய்து போராட்டம் செய்தால், அது ஏற்றுக்கொள்ளத் தக்கது. கத்தாபீ முகம் கொடுக்கும் நிலை அதுவே. அது ஏற்றுக்கொள்ளத் தக்கதும் கூட. சதாம் நிலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. (எவன் நாட்டுல எவன் வர்றது?)
** எந்த நாட்டிலும் தலைவர்கள் தவறு செய்யாமல் இல்லை. ஆனால் எந்த நாட்டிலாவது முஸ்லிம் தலைவர்கள் தவறு செய்தால் மட்டும், அதற்கு எதிராக அமெரிக்கா மட்டுமல்ல, அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஒரு கூட்டமே கிளம்பி விடும்.
** எல்லாவற்றிற்கும் மேலாக, ஒசாமா என்ற பாத்திரம் உண்மையானதா? அப்படியே உண்மையாக இருந்தாலும், அவர்தான் WTC தாக்குதலுக்குக் காரணமா?, அவர் அது தவிர வேறு என்ன தவறுகள் செய்துள்ளார்? ஆதாரம் உண்டா?,அவர் ஒரு முஸ்லிம் என்பதாலா?, அப்படியே அவர் முஸ்லிமாக இருந்தாலும், முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்?, அரசியல் ஆதிக்கங்களை உறுதிப் படுத்திக்கொள்ள அமெரிக்கா ஆடிய நாடகமா?, சமுக, மதம் சார்ந்த கிளர்ச்சிகளை உருவாக்கி, குளிர் காயும் தந்திரமா?. இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்கிறதா? இது பற்றி தெளிவாக கருத்துத் தெரிவிக்க, நாங்கள் முதலில் நன்றாக ஆராய வேண்டும். நான் முயன்றுவிட்டேன். கடைசியில் குழப்பமான ஒரு நிலையில் முடிவே இல்லாத ஒரு முடிவுக்கு வந்தேன்.


#### எனது பொதுவான கருத்து, நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில், ஒரு முஸ்லிமால் இன்னொருவரைக் காரணம் இல்லாமல் கொலை செய்ய முடியாது. அப்படிக் கொள்வதாயின் அதற்கு தண்டனையும் கொலையாகும். ஒசாமாவாக இருந்தாலும்சரி, ஒபாமாவாக இருந்தாலும்சரி, எங்கேயும் குண்டு வைத்து அப்பாவி ஜனங்களைக் கொலை செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கொலை செய்யப் பட்டவர் முஸ்லிமாக இருந்தாலும்சரி முஸ்லிம் அல்லாதவரா இருந்தாலும்சரி. அந்த அந்த நாட்டு மக்கள் அந்த நாட்டுத் தலைவர்களைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும். தவறு நடந்தால் கிளர்ந்து எழுவதும், உரிமைகளை பெற்றுக்கொள்வதும் அவர்களது கையில். வேறொரு நாடு இதில் தலையிடுவது முற்றிலும் தவறு.


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |