எப்படி படிக்கலாம்? நகைச்சுவை பதிவு
Do you like this story?
சிறுவயது முதல் பள்ளியில் படிக்கும் போது ஒரு இலட்சியத்தினை மனதில் வைத்து டாக்டர் ஆகவேண்டும் ,போலிஸ் ஆகவேண்டும் கணக்காளர் ஆகவேண்டும் என பல கனவுகளோடு பள்ளி பருவத்தினையும் கல்லூரி பருவத்தினையும் முடித்திருப்போம் . ஆனால் தாம் கொண்ட இலட்சியத்தின் படி தமது கல்விதகமையினை வளர்த்து கொண்டு உயர் தகைமைகளை அடைவோர் நம்மில் சிலரே .
இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கோடு பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டு பிடிக்க பட்ட இந்த செயல் முறைகளோடு உங்கள் கல்வியினை நீங்கள் மேற்கொண்டால் உரிய இடத்தினையும் உங்கள் இலட்சிதினையும் அடையலாம் ...அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் இதோ...
1 . நீங்கள் டாக்டர் அல்லது இஞ்சினியர் ஆகவேண்டுமா எப்போதும் முதல் வரிசை பெஞ்சில் மட்டுமே அமருங்கள் நீங்கள் 1st class இல் பாசாகி உங்கள் இலட்சியத்தினை அடையலாம் .
2 . முதல் வரிசையில் உள்ளவர்களை நீங்கள் கண்ட்ரோல் செய்ய வேண்டுமா ? எப்பொழுதும் இரண்டாம் வரிசையில் அமருங்கள் ஒரு administrator ஆகி இவர்களை உங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரலாம் .
3 . முதல் இரு வரிசையில் உள்ளவர்களும் கண்ட்ரோல் செய்ய வேண்டுமா மூன்றாம் வரிசையில் அமருங்கள் ஒரு அரசியல் "வியாதி " ஆகி இவர்களை உங்கள் கட்டுக்குள் கொண்டுவரலாம் .
4 . முதல் மூன்று வரிசையையும் உங்கள் கட்டு பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமா ? எப்பொழுதும் கடைசி வரிசையிலேயே அமருங்கள் ஒரு ஊர்போற்றும் ரவ்டி யாக உருவெடுத்து எல்லாரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்.
நீங்கள் எந்த வரிசையில் அமரவேண்டும் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் . உங்கள் இலட்சியங்களை அடைய எனது வாழ்த்துக்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
5 Responses to “எப்படி படிக்கலாம்? நகைச்சுவை பதிவு”
November 24, 2011 at 3:29 PM
என்ன கொடுமை சார்
November 24, 2011 at 3:59 PM
பள்ளி போகாமல் பாஸ் பன்னமுடியாதா ?
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
November 24, 2011 at 4:00 PM
எதுவும் படிக்கலானா .. ப்ளாக் ஆரம்பிக்கலாம்
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
November 24, 2011 at 9:48 PM
நீங்க எந்த பெஞ்சுல ஒக்காந்து யோசிச்சீங்க?
November 25, 2011 at 6:54 AM
அப்போ முதல் வரிசையில் அமர்ந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியுமா?
Post a Comment