பத்து தலை நாகம்!

என்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை சுற்றுகிறதா ? இந்த செய்தியைகேட்டவுடன்  எனக்கும் கிர்ர் என்று தலை சுற்றியது, கடந்த 3 வாரங்களாய் இலங்கையில் பரப்பாக இருக்கும் செய்தி இது தான் இந்தியாவில் நம்ம நித்யானந்த அடிகளாரின் செய்திகள் போல் இலங்கையில் செம கலக்சன் இந்த செய்தியின் மூலம் பத்திரிகை துறையினருக்கு, அனால் என்னவோ இந்த அபூர்வா  செய்தியை பற்றி இலத்திரனியல் ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை .சரி மேட்டருக்கு வருவோம் இலங்கையில் போரினால் பதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில்  தொல்புரம் பொக்கனை பகுதியில் பத்து தலையுடன் நாகம் தென்பட்டதாக வதந்தி பரவி காட்டு தீபோல் நாடுபூராக பரவியது செய்திதாள்கள் அதனை உண்மையென படத்துடன் செய்திகளையும் வெளியுட்டுள்ளது அதுவும் பிரபல பத்திரிகைகள் ,அதுமட்டுமல்லாமல் கொழும்பில் இருந்து விலங்கியல் நிபுணர்களும் அப்பகுதிக்கு படை எடுத்து சென்றனர்.
இதில் உச்ச கட்டமாக அப்பகுதி தமிழ் மக்கள் கிருஷ்ணரின் அவதாரம் என்றும் சிங்களவர்கள் புத்தரின் அவதாரம் என்றும் கதைக்கு திரைகதை வசனம் என்பன கொடுத்து மேலும் மெருகேற்றினர்.சில ஆசாமிகள் இந்த படத்தினை 10 ரூபா முதல் 50 ரூபா வரை பிரதிகள் எடுத்து விற்பனை செய்தனர்.

ஆனால் இந்த படங்கள் கணணி திருட்டு ஆசாமிகளின் கைவண்ணம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.பத்து தலை நாகத்தின் நிழலினை உற்று பார்த்தல் உண்மை தெளிவாக புலப்படும் .
அப்படியும் விளங்காதவர்கள் கீலேதரபட்ட படங்களை பார்கவும் .


பத்துதலை நாகத்தின் நிழலுக்கும் ஒரு தலைதான் ,ஒருதலை நாகத்தின் நிழலுக்கும் ஒருதலை தான் என்ன கொடும சரவனா இது ,அதுமட்டுமில்லாமல்  நாகத்தின் பத்து தலைகளும் ஒரேதிசையில் ஒரே மாதிரியாக இருக்கின்றது கலக்கல் மன்னர்கள் இதனை திருத்திக்கொள்ள  மறந்திவிட்டனர் .

ஸ்பா ஒரு போட்டவ  வெட்சி என்னமா கத கட்டுறானுங்க ......

கருப்பா .. ..........பீ கேயாபுள் ...நா என்னைய சொன்னன் ...

13 Responses to “பத்து தலை நாகம்!”

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
December 26, 2010 at 8:44 AM

நல்லபதிவு...
நண்பரே 3 மாதங்களுக்கு முன்னே இந்த பாம்பு படத்தை பார்த்தேன்..


Unknown said...
December 26, 2010 at 8:50 AM

ரைட் நண்பா.. முதல் படத்துலயே.. பின்னாடி இருக்கற நிழலைப் பார்த்துட்டேன்.. மக்களை எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க..


FARHAN said...
December 26, 2010 at 1:00 PM

பிரஷா said... 1

நல்லபதிவு...
நண்பரே 3 மாதங்களுக்கு முன்னே இந்த பாம்பு படத்தை பார்த்தேன்..

பத்து தல பாம்ப மட்டுமா பார்த்திங்க
நன்றி


FARHAN said...
December 26, 2010 at 1:01 PM

பதிவுலகில் பாபு

ரைட் நண்பா.. முதல் படத்துலயே.. பின்னாடி இருக்கற நிழலைப் பார்த்துட்டேன்.. மக்களை எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க..


ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை எமதுரவங்க இருக்க தானே செய்வாங்க


எம் அப்துல் காதர் said...
December 26, 2010 at 1:21 PM

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html


FARHAN said...
December 26, 2010 at 2:09 PM

நன்றி நண்பா விருதினை பெற்றுக்கொண்டேன் ....
வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்


அஸ்மா said...
December 26, 2010 at 11:26 PM

கேட்பவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுச்சுன்னு கூட சொல்வாங்க :)) எப்படியோ வயிற்றுப் பிழைப்பு நடத்த ஒரு வழி வேணும். அதற்கு ஏமாளி மக்கள் சிலர் வேணும். அதுபோதும் அவங்களுக்கு, ஹ்ம்....! நல்ல பதிவு சகோ.


Ramesh said...
December 27, 2010 at 7:30 AM

முதல் படத்துலயே நிழலைப் பாத்து இது டுபாக்கூருன்னு பின்னூட்டம் போடலாம்னு வந்தேன்.. பாத்தா நீங்க பதிவே அதுக்குதான் போட்டிருக்கீங்க.. :-)


ஆமினா said...
December 27, 2010 at 7:55 AM

என்னமா ஏமாத்துறானுங்க


FARHAN said...
December 27, 2010 at 8:50 AM

அஸ்மா ஹஹா ஹஹஹா ...சரியாக சொன்னீங்க சகோ


FARHAN said...
December 27, 2010 at 8:53 AM

பிரியமுடன் ரமேஷ் @நல்ல வேலை படத்துடன் நிறுத்த இல்லை ,,,இல்லேன்னா என் பொழப்பு நாரி இருக்கும்
நன்றி நண்பா


FARHAN said...
December 27, 2010 at 8:54 AM

ஆமினா
என்னமா ஏமாத்துறானுங்க


அதனால தான் கருப்பா .. ..........பீ கேயாபுள் ...நா என்னைய சொன்னன் ...


சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...
February 8, 2011 at 1:08 PM

நல்ல பதிவு


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |