விருந்தாளிகள்.....(சிறுகதை)



முதன் முதலாக கருப்பனிடமிருந்து ஒரு சின்னஞ்சிரிய சிறுக்கதை அனுபவமில்லாமல் எழுதி இருக்கின்றேன் தங்களின் ஆதரவை எதிர்பார்த்து 

“டாக் டாக்” “டாக் டாக்”... “ரகு....!” “ரகு........!”
நெத்தியில் இருந்த வியர்வையைத் துடைத்தபடி, சேலையை சரிசெய்து, சமயலரைக்குள்ளிருந்து விரைந்து வந்த கமலா, நேராக பெட்ரூமுக்குள் சென்று “இந்தா பாருங்க.. அவங்க எல்லாரும் வந்துட்டாங்க. இந்தப் பட்டப் பகல் நேரத்துல இன்னம் என்ன தூக்கம்! எலும்புங்க. அவங்க வந்துட்டாங்க!..” என்று ரகுவை எழுப்பினால். அவனும் திடுக்கிட்டு தடுமாற்றத்தோடு, பேட்ரூமிளிருந்து வெளியே விரைந்து வந்து, அவசரமாக கதவைத் திறக்க முனைந்தான். பின் தனது வலது கையால் இரு கண்களையும் நன்கு துடைத்துக் கொண்டு தலை முடியையும் சற்று சரி செய்துகொண்டு, கதவைத் திறந்தான்.

“ஆ... வாங்க.. வாங்க..  உங்களைத்தான் எதிர்பார்துட்டு இருந்தேன்..ஏ இவ்வலவ் லேட்?” என்று சொன்னபடியே உள்ளே அழைத்தான். சைகையாலேயே அவர்களை உட்காரவும் செய்தான். பின், “கமலா..கமலா.. அவங்க எல்லாரும் வந்துட்டாங்க.” என்று சமையல் அரைப பக்கம் தலையை திருப்பியவாறு சத்தமிட்டான். அவர்கள் வந்தது கூட தெரியாதவள் போல விரைந்து வந்து அவர்கள் முன்னிலையில் சற்று சிரித்துவிட்டு மீண்டும் சமயலரைக்குல்லேயே போனால் கமலா.

பெரிய பிளாஷ் பாக் ஒன்னும் இல்லீங்க. இது ரகுவின் காரியாலயத்தில் ஒன்னாக வேலை பார்க்கும் நண்பர்கள். பொதுவாக வீட்டுக்கு விருந்தாளிகள் வருவதென்றாலே கமலாவுக்குப் பிடிக்காது. அதிலும் ரகுவின் தரப்பில் யாராவது வந்தால்? சொல்லவே வேண்டியதில்லை. சமையல் செலவு, பாத்திரம் எல்லாம் கழுவ வேண்டும், வீட்டை நன்றாக சுத்தம் செய்யணும், இவை எல்லாவற்றையும்விட பெரிய கொடுமைதான் ரகுவுடன் வேலை செய்யும் ரஞ்சிதா. அவள் ரகுவுடன் என்ன பேசுகிறாள், எப்படி நடந்து கொள்ளுகிறாள் என்பதையெல்லாம் பார்த்துப் பார்த்தே கமலாவுக்கு போதுமென்று ஆகிவிடும்.

அதனால் பொதுவாக ரகு யாரையும் வீட்டுக்கு கூட்டிவர விரும்ப மாட்டான். இந்தமுறை ரகுவுக்கு பதவி உயர்வு கிடைத்தது. அத்தோடு அது பண்டிகைக் காலம். எல்லோரும் வற்புறுத்தி கேட்டதால், அவனால் மறுக்க முடியவில்லை. மிச்சம் கஷ்டப் பட்டு கமலாவையும் சம்மதிக்க வைத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, ரகுவின் மேலதிகாரியும், அவரது மனைவியும் வருவது இதுவே முதல் தடவை. அதனாலேயே, சமையல் வேலைகளெல்லாம் காலையிலேயே ஆரம்பமாகிவிட்டது. இப்போது கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில்.

“வந்தவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தவாறே, “என்ன குடிப்போம்?” என்று பொதுவாகக் கேட்டான் ரகு. கமலா உள்ளே இருந்தாலும், இரு காதுகளையும் நுணுக்கமாக அவர்களின் வார்த்தைகளின் பால் இட்டிருந்தாள். ஒருவர் “எனக்கு டீ.. என்றார். இன்னொருவர் “காபி என்றார். “தன்னி “குளிர்பானம் என்று ஒவ்வருவரும் தங்களுக்குத் தேவையானதை அடுக்கிக்கொண்டே போனார்கள். பின் “எக்ஸ்கிச்மீ.. என்று கூறியவாறு எழுந்த ரகு, சமையலறைப் பக்கம் சென்றான். இவை ஒன்றையும் கேட்கவே இல்லை என்று சொல்லும் வண்ணம் தனது சமையல் வேலைகளை செய்தவாறே நின்றால் கமலா. “கமலா... “ரென்டு ஐஸ் கிரீம்,.. மூணு காபி, ஒரு கூல் டிரிங்க்ஸ், நாலு டீ... என்று தனது பட்டியலை சொல்லிக்கொண்டே போனான் ரகு. அவனுக்கு ஏற்கெனவே தெரியும் இதற்கு கமலா என்ன சொல்லப் போகிறாள் என்று. இருந்தாலும் அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆச்சரியத்துடனும் கோபத்துடனும், அலைச்சலை காட்டியவன்னமும் திரும்பிப் பார்த்த கமலா, “எத்தன பேரு!.. நான் அப்பவே சொன்னேன். இதெல்லாம் என்குளுக்கு தேவ தானா? இதெல்லாம் வாங்க கடைக்குப் போனா கடைக்காரன் மூஞ்சில பாய்வான். எல்லாருக்கும் ஒண்ணா ஏதாச்சும் குடுத்தா போதும். இதுல ஒரு எடத்துக்குப் போறதுன்னா கைல ஏதாச்சும் எடுத்துன்னுவரக் கூடத் தெரியாத ஆளுங்க என்று சொன்னபடி முனங்கிக்கொண்டே ரகுவைக் கண்டுகொல்லாதபடி தனது வேலைகளைத் தொடர்ந்தாள்.

ரகுவால் கமலாவுக்கு ஏசவும் முடியவில்லை, விருந்தாளிகளை அசிங்கப் படுத்தவும் முடியவில்லை. தரையைப் பார்த்தபடியே நின்றான். “எக்ஸ்கிச்மீ..ரகு.. எல்லாருக்கும் சேர்த்து கூல் டிரிங்க்ஸ் பண்ணிடுங்க என்ற சத்தம் ரகுவின் காதில் தேனாய் ஒலித்தது. “இல்ல இல்ல..இதோ இப்ப எல்லாமே ஆயிடும்..பைவ் மினுட்ஸ் என்று கூறியபடியே கமலாவின் முகத்தைப் பார்த்தான். ஒரு பரம எதிரியைப் பார்ப்பதுபோல் இருந்தது கமலாவின் பார்வை. “இட்ஸ் ஓகே. ஜஸ்ட் கூல் டிரிங்க்ஸ் போதும். அதையே பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார். கமலாவுக்கு உதவிய ரகு, குளிர் பானத்தை ஏந்தியவண்ணம் விருந்தாளிகளை நோக்கிச் சென்றான். அனைவருக்கும் பரிமாறினான்.

7 Responses to “விருந்தாளிகள்.....(சிறுகதை)”

Yaathoramani.blogspot.com said...
April 29, 2011 at 4:54 AM

நல்ல துவக்கம்
எழுத்துப் பிழையா
அல்லது பெட் ரூம் பிடிக்காதா?
பேட் ரூம் என இருக்கிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்


சக்தி கல்வி மையம் said...
April 29, 2011 at 5:02 AM

அசத்தலான கதை தொடருங்கள்..


பாலா said...
April 29, 2011 at 6:51 AM

கதை நன்றாக இருக்கிறது. சிறுகதைன்னு சொல்லிட்டு தொடரும் போட்டுட்டீங்களே? ஒரு சிறு கருத்து. சிறுகதைக்கு இவ்வளவு பெரிய காட்சி விளக்கங்கள் தேவை இல்லை.


கவிதை வீதி... // சௌந்தர் // said...
April 29, 2011 at 8:02 AM

என்ன பாஸ் சிறுகதைன்னு தொடரும் போட்டுட்டிங்க....


கவிதை வீதி... // சௌந்தர் // said...
April 29, 2011 at 8:03 AM

இது ஒவ்வோறு வீட்டிலும் நடக்கும் சக நிகழ்வுகளை அப்படியே தந்திருப்பது கதைக்கு வலு..
தொடருங்கள்..


சென்னை பித்தன் said...
April 29, 2011 at 5:39 PM

சிறுகதை,தொடர்கதையாகி விட்டதே!காத்திருக்கிறேன்!


FARHAN said...
April 30, 2011 at 9:25 AM

கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் சிறுகதை ஒன்று எழுதவேண்டும் என சின்ன ஆவல் எனவே எழுத துவங்கினேன் ஆனால் கதை கொஞ்சம் பெரிதாக போய்விட்டது அதனால் தான் தொடர்கதை யாகிவிட்டது கதையின் தொடர்ச்சியையும் எழுதியுள்ளேன் தங்களின் ஆதரவினை எதிர் பார்த்தவனாக


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |